பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

153

"கோமாறஞ் சடையற்கு உத்தர மந்திரி களக்குடி வைத்தியன் மூவேந்த மங்கலப் பேரறையன் ஆகிய மாறங்காரி இக் கற்றளி செய்து நீர்த்தளியாதே சுவர்க்காரோகணஞ் செய்த பின்னை அவனுக்கு அனுஜன் உத்தரமந்த்ரபதம் எய்தின பாண்டிமங்கல விசையதரையன் ஆகிய மாறன் எயினன் முகமண்டபஞ் செய்து நீர்த்தளித்தான்.16

165

இந்தச் சாசனத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளுவது என்ன வென்றால், மாறஞ்சடையன் என்னும் பாண்டியன் காலத்தில் அவனுடைய அமைச்சர்களாக இருந்த மாறன் காரியும் அவன் தம்பி மாறன் எயினனும் யானை மலையிலே நரசிங்கப் பெருமாளுக்குக் கோயில் அமைத்தனர் என்பது. இந்த மலையைப் பற்றி மற்றும் தெரிந்து கொள்ள விரும்புவோர் எபிகிராபி அறிக்கையில் கண்டுகொள்க.'

166

பௌத்தக் கோயில்களையாவது, சமணசமயக் கோயில்களை யாவது வைணவர் கைப்பற்றிக் கொள்வதாக இருந்தால், அந்தக் கோயில்களில் நரசிங்கப் பெருமாளை அமைப்பது வழக்கம். இந்த முறைப்படி சமணர்கள் இருந்த யானை மலையைக் கைப்பற்றுவதற்கு வைணவர்கள் அதன்மேல் நரசிங்கப் பெரு மாளுக்குக் கோயில் அமைத்தார்கள். பிறகு இது "இந்துக்களின் மலையாக மாறி விட்டது. இந்தச் செய்தியைப் பிற்காலத்தவர் கதையாகக் கற்பித்துப் புராணம் எழுதி விட்டார்கள். அதுதான் திருவிளையாடற் புராணத்தில் யானை எய்த படலம் என்பது.

மதுரைமா நகரத்தை அழிக்கும் பொருட்டுச் சமணர்கள் தமது மந்திர சக்தியால் ஒரு யானையை உண்டாக்கி அனுப்பி னார்கள் என்றும், சோமசுந்தரக் கடவுள் அந்த யானையை நரசிங்க அம்பு எய்து கொன்றார் என்றும், கொல்லப்பட்ட அந்த யானை மலையாகச் சமைந்து விட்டது என்றும் இப்புராணக் கதை கூறுகிறது. இப்புராணத்தின் உள்பொருள் என்னவென்றால், யானைமலையில் சமணர் இருந்தார்கள் என்பதும்; அவர்கள் மதுரையில் அதிகம் செல்வாக்குடையவராக இருந்தார்கள் என்பதும்; அவர்கள் செல்வாக்கையடக்க அவர்கள் இருந்த யானைமலை மீது நரசிங்கப் பெருமாள் கோயில் அமைக்கப் பட்ட தென்பதும் ஆகும்.

நாகமலை:

ரு

இதுவும் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு மலை. பாம்பின் ருவத்தை ஒத்திருப்பதனால் இந்த மலைக்கு நாகமலை