பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

எனப்பெயர் உண்டாயிற்று. இந்த மலையின் மேலும் சமண முனிவர்கள் பண்டைக் காலத்தில் இருந்தனர். பிற்காலத்தில் இங்கிருந்த சமணமுனிவர்களை “இந்து சமயத்தார்” துரத்தி விட்டனர். பிறகு ஒரு புராணக் கதையைக் கற்பித்துக்கொண்டு, “நாகமெய்தபடலம்” என்று பெயரிட்டனர். சமணர், மதுரைமா நகரத்தை அழிப்பதற்காக ஒரு பெரிய பாம்பைத் தமது மந்திரசக்தியினால் உண்டாக்கி அதை மதுரை நகரத்தில் ஏவினார்கள் என்றும் சொக்கநாதப் பெருமான் அந்தப் பாம்பை அம்பு எய்து கொன்றார் என்றும் இறந்த அந்தப் பாம்பு கல்லாகச் சமைந்து விட்டது என்றும் அப்புராணம் கூறுகிறது.

யானைமலை, நாகமலையைப் பற்றிய கதைகள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டதைச் 'சில புராணக் கதைகள்’ என்னும் தொடர்புரையில் காண்க.

இடப கிரி:

ல =

இதற்குச் சோலைமலை என்றும் பெயர் உண்டு. தண்டலை மலை (தண்டலை = சோலை) என்று திருவிளையாடற் புராணங் கூறுகிறது. திருமாலிருஞ்சோலை என்றும் இதற்குப் பெயர் உண்டு. “ஒங்கிருங் குன்றம்”, “மாலிருங்குன்றம்”, “இருங்குன்றம்”, “கேழிருங்குன்றம்”, "சோலையொடு தொடர்மொழி மாலிருங் குன்றம்” என்று பரிபாடலில் இம்மலை கூறப்படுகிறது. இது இப்போது யானை மலையைப் போலவே வைணவத் திருப்பதியாக இருக்கிறது. பண்டைக் காலத்தில் இந்த மலையில் சமணர்கள் இருந்தார்கள் என்பதை இங்குள்ள குகைகளும், பிராமி எழுத்துக்களும், சான்று கூறுகின்றன. இதனை எபிகிராபி அறிக்கையில் காணலாம்.167

யானைமலையிலிருந்தும், நாகமலையிலிருந்தும் சமணர் துரத்தப் பட்டது போலவே இம்மலையிலிருந்தும் சமணர் துரத்தப்பட்டனர். பிறகு, இந்த மலைக்கும் ஒரு புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டனர். சமணர் தமது மந்திர சக்தியினால் மாயப்பசு ஒன்றை உண்டாக்கி அதை மதுரை நகரத்தை அழித்து வரும்படி அனுப்பினார்கள் என்றும் இதை யறிந்த சொக்கநாதர் தமது இடபத்தை ஏவி அந்தப் பசுவைக் கொண்டு விடச்செய்தார் என்றும், பிறகு இந்த ஞாபகார்த்தமாக இடபகிரியை உண்டாக்கினார் என்றும் இக்கதை கூறுகிறது.