பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

155

பசுமலை:

இதுவும் மதுரைக்கு அருகில் உள்ளது. சமணர்கள் ஏவிய மாயப் பசுவைச் சொக்கநாதருடைய இடபம் கொன்ற பிறகு, இறந்த அப் பசு மலையாகச் சமைந்துவிட்டது என்பது புராணக்கதை. இதிலும் பண்டைக் காலத்தில் சமணர்கள் இருந்தார்கள் என்று கருதப்படுகிறது.

இதுகாறுங் கூறப்பட்ட யானைமலை, நாகமலை, இடபமலை, பசுமலை என்பவை மதுரையைச் சூழ்ந்திருந்த சமணருடைய எண்பெருங் குன்றுகளைச் சேர்ந்தவை. ஏனைய நான்குமலைகள் எவை என்பதை ஆராய்வோம்.

திருப்பரங்குன்றம்:

மதுரைக்கு அருகில் இருந்த எண்பெருங் குன்றுகளில் திருப் பரங்குன்றமும் ஒன்று. மேலே காட்டப்பட்ட சமணரால் வழங்கிவருகிற வெண்பாவில் இக் குன்றம் முதலில் கூறப்படுகிறது. இந்த மலையில் சமணத் துறவிகள் இருந்த குகைகளும், பாறையில் அமைக்கப்பட்ட கற் படுக்கைகளும், பிராமி எழுத்துக்களும் இன்றும் காணப் படுகின்றன.168 தீர்த்தங்கரரின் உருவமும் பாறையில் அமைக்கப் பட்டுள்ளது.

சித்தர்மலை:

169

இப்பெயர் சமண முனிவர் இங்கு இருந் தார்கள் என்பதைத் தெரிவிக்கிறது. இந்த மலை மேட்டுப்பட்டி என்னும் ஊரில் இருக்கிறது. இம்மலையில் குகைகளும், கற்படுக்கைகளும் ருக்கின்றன. இவை, முற்காலத்தில் இங்குச் சமண முனிவர் இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. அன்றியும் இங்கு எழுகடல் எனப் பெயருள்ள ஒரு சுனை உண்டு. சமண முனிவர்கள் தமது மந்திர சக்தியினால் ஏழு கடல்களையும் இந்தச் சுனையில் வரும்படி செய்து பாண்டியனுக்குக் காட்டினார்கள் என்று தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூறுகிறார். “எழுகடலுக்கு மாறாக மதுரையில் எழுகடலெனக் காட்டின இந்திர சாலமும் உண்டு என்று அவர் எழுதுகிறார்; (கோயிலைப் பாடியது 70 ஆம் தாழிசை உரை.) சமணர் செய்ததாகத் தக்கயாகப்பரணி உரை யாசிரியர் கூறுகிற இக் கதையைப் பிற்காலத்து நூல்களாகிய திருவிளையாடற்

""