பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

161

சமணத் திருவுருவங்கள் கற்பாறையில் அமைக்கப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கான சாசனங்களும் இங்குக் காணப்படுகின்றன. இதற்கு வெட்டுவாங்கோயில் என்று பெயர் வழங்கப்படுகிறது. 188 பண்டைக் காலத்தில் இங்குச் சமணர் வெகு செல்வாக்குடன் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இங்குள்ள சாசனங்கள், பல சமணப் பெரியார் களுடைய பெயர்களைக் குறிப்பிடுகின்றன. இச் சாசனங்களில் காணப் படுகிற சில சமயப் பெரியார்களுடைய பெயர்களைக் கூறுவோம். இவர்கள் இங்குள்ள சமணத் திருமேனிகளை அமைத்தவர் ஆவர்.

1. ஸ்ரீ குணசாகர படரார் சீடன் பேரெயிற்குடி சாத்தன்தேவன் செய்வித்த திருமேனி. 2. இவ்வூர் புரயன்சேந்தனை சாத்திய சேந்தசேரி செய்வித்த திருமேனி. 3. திருக்கோட்டாற்றுப் பாதமூலத்தான் கன்மன் புட்ப நந்தி செய்வித்த திருமேனி. 4. மலைக்குளத்து ஸ்ரீவர்த்தமானப் பெருமாணாக்கர் ஸ்ரீ நந்தி 5. திருக்கோட்டாற்று உத்த நந்திக் குருவடிகள் மாணாக்கர் சாந்தி சேனப் பெரியார் செய்வித்த திருமேனி. 6. திருநறுங் கொண்டை பலதேவக் குருவடிகள் மாணாக்கர் கனகவீர அடிகள் செய்வித்த திருமேனி. 7. கோட்டூர் நாட்டுப் பெரும்பற்றூர் கூத்தங் காமனை சாத்தி திருச்சாணத்துக் குரத்திகள் செய்த படிமம். 8. திருநெச்சுரத்து மாறன் புல்லி செய்வித்த படிமம். இதுக்குக் கீழூரன் றொட்டான் திருவிளக்கு நெய். 9. திருநெச்சுரத்து சேந்தன் வேளான் செய்வித்த திருமேனி. 10. களக்குடிக் காமஞ் சிறுநம்பி செய்வித்த திருமேனி. 11. குறண்டிக் காவிதி செய்வித்த திருமேனி. 12. திருக் கோட்டாற்று விமளசந்திரக் குருவடிகள் மாணாக்கர் சாந்திகேசன் அடிகள் செய்வித்த படிமம். 13. திருநேச்சுரத்துக் கோன் மகன் சாத்தங்கண்ணான் மகன் கண்ணஞ் சாத்தன் செய்வித்த திருமேனி. 14. படிக்கமண படாரர் மாணாக்கர் பவணந்திப் பெரியார் செயல். 15. கடைக் காட்டூர் திருமலையர் மொனிபடாரர் மாணாக்கர் தயாபாலப் பெரியார் செய்வித்த திருமேனி. 16. வேண்பி நாட்டு பேரெயிற்குடி தேவஞ் சாத்தன் செய்வித்த திருமேனி. 17. பேரெயிற்குடி சேத்தங் காரியார் செய்வித்த திருமேனி. 18. புட்பநந்தி படாரர் மாணாக்கர் பெருணந்தி படாரர் செய்வித்த திருமேனி.19. வௌற்குடி மூத்த அரிட்டநேமி படாரர் மாணாக்கர் குணநந்தி பெரியாரைச் சார்த்தி மிழலூர்க் குரத்தியார் செயல். 20. நெடுமரத் தோட்டத்து குணந் தாங்கியார் செய்வித்த திருமேனி. 21. திருநெச்சுரத்து குமரனமலன் செய்வித்த திருமேனி. இங்குக் காணப்படும் சுமார் நூறு கல்வெட்டுச் சாசனங்களில்