பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

இருபத்தொரு சாசனங்களை மட்டும் இங்குக் காட்டினேன். இச் சாசனங்களைப் பார்க்க விரும்புவோர் (South Indian Inscriptions) என்னும் நூலிற் கண்டுகொள்க.189 இவ்வூர் பண்டைக் காலத்தில் ‘நெச்சுர நாட்டுத் திருநெச்சுரம்' என்று வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இங்குப் பண்டைக்காலத்தில் சித்தாந்தம் (சமண சித்தாந்தம்) நாள்தோறும் உபதேசிக்கப்பட்டு வந்ததையும், “சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்டுப் பதின்மர் வயிராக்கியர்க்கு ஆஹார தானமாகச்"சில நிலங்களைத் தானஞ் செய்திருந்த செய்தியையும் இன்னொரு சாசனம் கூறுகின்றது.

வீரசிகாமணி :

சங்கரநயினார் கோயிலுக்கு வடமேற்கு 9.1/2 மைலில் உள்ளது. இங்குள்ள பாறையில் குகைகள் உள்ளன. ஒரு குகையில் ஒரு வட்டத் திற்குள் இரண்டு பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இன்னொரு குகையில் சில உருவங்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வூரார் இவ் வுருவங்களைப் பஞ்ச பாண்டவர் என்று அழைக்கின்றனர். கயிலாச நாதர் கோயில் என்னும் ஒரு சிறு கோயிலும் இங்கு உண்டு. பஞ்ச பாண்டவர் உருவம் என்று கூறப்படுவன சமணத் திருவுருவங்களாகும் என்று கருதுகின்றனர்.190

குளத்தூர் :

ஒட்டப் பிடாரத்திலிருந்து வடகிழக்கு 141/, மைலில் உள்ளது. இவ்வூரில் உள்ள சமணத் திருமேனியை இவ்வூரார் வணங்கி வருகிறார்கள்.1

மந்திகுளம் :

191

முந்திகுளம் என்றும் கூறப்படும். ஒட்டப் பிடாரத்திலிருந்து வடகிழக்கே 17 மைலில் வைப்பாற்றங்கரையில் உள்ளது. இங்கு ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது.192

முரம்பன் :

ஒட்டப்பிடாரத்திலிருந்து தென்மேற்கில் 5 மைலில், அஃதாவது, ஒட்டப்பிடாரத்திலிருந்து கயத்தாற்றுக்குப் போகிற சாலையின் வலதுபக்கத்தில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது. இதனை இவ்வூரார் வசணர் (சமணர்) என்று கூறுகிறார்கள்.193