பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

அழிவு காலத் தறத்தொடர்ப் பாடெலாம்

ஒழியல் வேண்டுமென் றொற்றுமை தாங்கொளீஇ வழியுங் காட்டுமம் மாண்புடை யார்கண்மேல் பழியிங் கிட்டுரைத் தாற்பய னென்னையோ?1

185

இதற்கு உரை எழுதிய சமயதிவாகர வாமன முனிவர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார்:

"சல்லேகனையாவது - மரண காலத்துச் சாகின்றோ மென்று சங்கிலேசம் (வருத்தம்) சரீராதியில் சங்கமெல்லா மொழியல் வேண்டுமென்று சொல்லிச் சித்த சமாதானம் பண்ணுவித்துக் கலக்க நீக்கி, பரலோக கமன பாதேய (கட்டமுது) மாகிய பஞ்ச நமஸ்கார பரம மந்திரோபதேசம் பண்ணி ரத்தினத் திரய ரூபமாகிய சன்மார்க்கங் கலங்காமை, தர்மோப தேசனாதிகளாற் கட்டுதல்.

எல்லாப் படியும் விலக்கப் படாது, எரியால் இல்லம் அழியில் அதனகத்தில் - நல்ல

பொருள்கொண்டு போவான்போற் சாம்போது பற்றற்று அருள்கொண்டு போத லறம்.

என்பவற்றானும் சல்லேகனையாமாறறிந்து சொல்லிக்கொள்க.

பத்திரபாகு முதலான சமணசமயப் பெரியார்கள் பலர் சல்லேகனை யிருந்து உயிர் நீத்த செய்தி மைசூர் நாட்டில் சிரவண பௌகொள என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டுச் சாசனங் களினால் தெரிகிறது. சமணசமயத் துறவியாராகிய கவுந்தி அடிகள் என்னும் மூதாட்டியார் சல்லேகனை என்னும் உண்ணா நோன்பிருந்து உயிர் விட்ட செய்தி சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது. கோவலன் கொலை யுண்டதும், பாண்டியனும் கோப்பெருந் தேவியும் உயிர் நீத்ததும், அரண்மனை எரியுண்டதும், மாதரி என்னும் மூதாட்டி அடைக்கல மிழந்த துயரந் தாங்காமல் தீயில் பாய்ந்து உயிர் விட்டதும் ஆகிய துயரச் செய்திகளை யெல்லாம் கவுந்தியடிகள் அறிகிறார். அறிந்து ஆற் றொணாத் துயர் அடைகிறார். இத் துயரச் செயல்களுக்கும் தமக்கும் தொடர்புண் டென்று கருதுகிறார். மாசற்ற தூய மனம் படைத்த அம் மூதாட்டி யாருக்குத் தீராத் துயரம் உண்டாகிறது. ஆகவே, சமண சமயக் கொள்கைப்படி உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறார், இதனை,