பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

206

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

கோயில்கள் பிற்காலத்தில் சைவ வைணவக் கோயில்களாக மாற்றப் பட்டதுகோல, திருப்பருத்திக் குன்றத்துச் சமயக் கோயிலும் ‘இந்து’ கோயிலாக மாற்றப்பட்டுவிடும் என்னும் நம்பிக்கையுடன் காஞ்சி மகாத்மியத்தின் ஆசிரியர்இவ்வாறு கதை கற்பித்துக்கொண்டார் போலும். ஆனால், நற்காலமாகத் திருப்பருத்திக்குன்றம் இன்னும் சமணக் கோயிலாகவே இருந்து வருகின்றது.

Epi. Indi. Vol. VIII. P. 317