பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

21

இந் நூலில் ஜைனர் என்னும் சொல்லுக்குப் பதிலாகச் சமணர் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணம் இவ் வச்சகத்தில் வடமொழி அச்செழுத்துக்கள் அதிகம் இல்லாமை யேயாம். ஜைன நண்பர்கள் இதனைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இந்நூலின் பின்னிணைப்பில் சேர்த்துள்ள “சமணசமயப் புகழ்ப்பாக்கள்” பெரும்பாலும் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை உரைகளில் மேற்கோள் காட்டப்பட்டவை.

பத்து ண்டு அஞ்ஞாதவாசத்தின் பிறகு இந் நூல் இப்போது முதன்முதலாக வெளிப்படுகின்றது. இந் நூல் வெளி வருவதற்குக் காரணராயிருந்து இதனை நன்கு அச்சிட்டு வெளிப்படுத்திய நண்பர், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சிப் பொறுப்பாளர் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கு எனது நன்றியும் தமிழகத்தின் நன்றியும் உரியதாகும்.

ள்

மலரகம், மயிலாப்பூர் சென்னை, 1-11-54

மயிலை. சீனி. வேங்கடசாமி.