பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

திருகிய புரிகுழ லரிவைய ரவரொடு திகழொளி யிமையவரும்

பெருகிய கரிகுல மருவிய படையொடு பிரிதலி லரசவைய

முருகுடை மலரொடு வழிபட முனிகளை

நனியக லாவருகன

திருவடி முறைமுறை யடைபல ரடைகுவ

ரமரொளி யமலருகே.

(44)

நாகிளம்பூம் பிண்டிக்கீழ் நான்முகனாய் வானிறைஞ்ச மாகதஞ்சேர் வாய்மொழியான் மாதவர்க்கு மல்லார்க்கும் தீதகல வெடுத்துரைத்தான் சேவடிசென் றடைந்தார்க்கு மாதுயரந் தீர்த லெளிது.

(45)

பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானா விண்கொண்ட வசோகின்கீழ் விழுமியோர் பெருமானைக் கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும் பயில்வார்கள் விண்ணாலும் வேந்தரா வார்.

(46)

வஞ்சிப்பா

பார்பரவிய பருவரைத்தாய்

கார்கவினிய கதழொளியாய்

நீர்மல்கிய நீண்மலரவாய்

திறமல்கிய தேனினமுமாய்,

அதனால்

மொய்ம்மலர் துவன்றிய தேம்பாய்

மலரடியிணையை வைத்தவா மனனே.

(47)

முரன்று சென்று வட்டின

நிரந்த பிண்டி நீழலுள்

பரந்த சோதி நாதனெம்

அரந்தை நீக்கு மண்ணலே.

(48)

217