பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

இனமணி யாரமா இயன்றிருள் இரிந்தோட

அந்தரத் துருளுநின் அலர்கதிர் அறவாழி

இந்திரனும் பணிந்தேத்த இருவிசும்பில் திகழ்ந்தன்றே; வாடாத மணமாலை வானவர்கள் உள்ளிட்டார் நீடாது தொழுதேத்த நிறஞ்சேர்ந்த பெருங்கண்ணு முகிழ்பரிதி முகநோக்கி முறுவலித் துண்ணெகிழ்ந்து திகழ்தகைய குடைபுடைசூழ் திருந்துகழல் திளைத்தன்றே.

அம்போதரங்கம்

நாற்சீர் ஈரடி

மல்லல் வையம் அடிதொழ தேத்த

அல்லல் நீத்தக் கறப்புணை யாயினை

ஒருதுணி வழிய உயிர்க்கர ணாகி

இருதுணி யொருபொருட் கியல்வகை கூறினை.

நாற்சீர் ஓரடி

ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி

வீடொடு கட்டினை விளக்கும் நின்மொழி விருப்புறு தமனியம் விளக்கும் நின்நிறம் ஒருத்தல் கூடுற வுஞற்றும் நின்புகழ்.

முச்சீரோரடி

இந்திரற்கும் இந்திரன் நீ; இணையில்லா இருக்கையைநீ; மந்திரமொழியினைநீ; மாதவர்க்கு முதல்வனும்நீ; அருமைசால் அறத்தினைநீ; ஆருயிரும் அளித்தனைநீ; பெருமைசால் குணத்தினைநீ; பிறர்க்கறியாத் திறத்தினைநீ. இருசீர் ஓரடி

பரமன்நீ; பகவன்நீ; பண்பன்நீ; புண்ணியன்நீ; உரவன்நீ; குரவன்நீ; யூழிநீ; உலகுநீ;

அருளும்நீ; அறமும்நீ; அன்பும்நீ; அணைவும்நீ; பொருளும்நீ; பொருப்புநீ; பூமியும்நீ; புணையும்நீ; எனவாங்கு,

219