பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

சுரிதகம்

அருள்நெறி ஒருவநிற் பரவுதும் எங்கோன்

திருமிகு சிறப்பிற் பெருவரை யகலத்து

எண்மிகு தானைப் பண்ணமை நெடுந்தேர் அண்ணல் யானைச் செங்கோல் விண்ணவன்

செருமுனை செருக்கறத் தொலைச்சி

ஓருதனி வெண்குடை ஓங்குக எனவே.

தலையளவு அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா

தரவு

(52)

அலைகடற் கதிர்முத்தம் மணிவயிர மவையணிந்து மலையுறைமா சுமந்தேந்து மணியணைமேல் மகிழ்வெய்தி யோசனைசூழ் திருநகருண் ணுலகொருமூன் றுடனேத்த ஈசனையா மினிதமர்ந்தங் கிருடிகட்கு மிறைவற்கும் அருளறமே யறமாக வயலார்கள் மயலாக

இருளறநன் கெடுத்தியம்பி யிருவினைகள் கடிந்திசினோய்.

தாழிசை

துன்னாத வினைப்பகையைத் துணிசெய்யுந் துணிவினையாய் இன்னாத பகைமுனைபோல் எரித்தடக்கு நினைப்பினால் இருளில்லா வுணர்வென்னு மிலங்கொளியா லெரித்தனையா யருளெல்லா மடைந்தெங்கண் ணருளுவதுன் னருளாமோ மதிபுரைமுக் குடைநீழல் மகிழ்வெய்தி யடைந்தோரைக் கதிர்பொருதக் கருவரைமேற் கதிர்பொருத முகம்வைத்துக் கொன்முனைப்போல் வினைநீங்கக் குளிர்நிழற்கண் மகிழ்ந்தனிர்போ

னின்மினீ ரெனவுரைத்தல் நிருமலநின் பெருமையோ மனைதுறந்து வளம்புகுமின் மலமறுக்கல் உறுவீரேல் வினையறுக்க லுறுவார்க்கு விழுச்செல்வம் பழுதென்றிங் கலகில்லாப் பெருஞ்செல்வத் தமரரசர் புடைசூழ

வுலகெல்லா முடன்றுறவா வுடைமையுநின் னுயர்வாமோ.