பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

அராகம்

அரைசரும் அமரரும் அடிநிழல் அமர்தர

முரைசதிர் இமிழிசை முரணிய மொழியினை.

பேரெண்

அணிகிளர் அவிர்மதி யழகெழில் அவிர்சுடர் மணியொளி மலமறு கனலி நின்னிறம்

மழையது மலியொலி மலிகடல் அலையொலி முறைமுறை யரியது முழக்கம் நின்மொழி.

இடையெண்

வெலற்கரும் வினைப்பகை வேரொடும் வென்றனை சொலற்கரு மெய்ப்பொருள் முழுவதும் சொல்லினை அருவினை வெல்வர்க் கரும்புணை ஆயினை ஒருவனை யாகி யுலகுடன் உணர்ந்தனை.

சிற்றெண்

உலகுடன் உணர்ந்தனை உயிர்முழு தோம்பினை நிலவுறழ் நிறத்தினை, நிழலிய லியாக்கையை மாதவர் தாதையை, மலர்மிசை மகிழ்ந்தனை

போதிவர் பிண்டியை, புலவருட் புலவனை

எனவாங்கு,

சுரிதகம்

அருளுடை ஒருவநிற் பரவுதும் எங்கோன் இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை ஒருவனை வேண்ட இருநிறங் கொடுத்த நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி

ஒற்றைச் செங்கோல் ஓச்சிக்

கொற்ற வெண்குடை நிழற்றுக எனவே.

(53)

221