பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

இடையளவு அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா

தரவு

பிறப்பென்னும் பிணிநீங்கப் பிரிவரிய வினைக்கடலை அறப்புணையே புணையாக மறுகரைபோய்க் கரையேறி இறப்பிலநின் அருள்புரிந்தாங் கெமக்கெல்லா மருளினையாய் மறவாழி ஒளிமழுங்க மனையவர்க்கும் முனையவர்க்கும் அறவாழி வலனுயரி யருள்நெறியே யருளியோய்.

தாழிசை

அருளெல்லா மகத்தடக்கி யடிநிழலை யடைந்தோர்க்குப் பொருளெல்லாம் நீவிளங்கப் புகரில்லா வகையினால் இருளில்லா மனஞானம் இயம்பியதுன் இயலாமோ.

தீதில்லா நயமுதலாத் திருந்தியநல் லளவைகளால் கோதில்லா அரும்பொருளைக் குறைவின்றி யறைந்ததற்பின் பேதில்லா வியற்காட்சி யருளியதுன் பெருமையோ.

துணையில்லாப் பிறப்பிடைக்கண் துயரெல்லாம் உடன்கல புணையில்லா உயிர்கட்குப் பொருளில்லா அருளினால் இணையில்லா நல்லொழுக்க மிசைத்ததுநின் னிறைமையோ.

அராகம்

அருள்புரி திருமொழி அமரரும் அரசரும்

மருள்வரு மனிதரும் மகிழ்வுற இயம்பினை.

பேரெண்

பூமலர் துதைந்த பொழிலணி கொழுநிழல் தேமல ரசோகினை தூமலர் விசும்பின் விஞ்சையர் பொழியும் மாமலர் மாரியை.

இடையெண்

காமரு கதிர்மதி முகத்தினை

சாமரை யிடையிடை மகிழ்ந்தனை

தாமரை மலர்புரை யடியினை

தாமரை மலர்மிசை ஒதுங்கினை.