பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

223

சிற்றெண்

அறிவனைநீ, அதிசயன்நீ, யருளினைநீ. பொருளினைநீ.

உறுவனைநீ. உயர்ந்தனைநீ.

உலகினைநீ. அலகினைநீ.

எனவாங்கு,

சரிதகம்

இனையை ஆதலின் முனவருள் முனைவ நினையுங் கால நின்னடி யடைதும்

ஞானமும் காட்சியும் ஒழுக்கமும் நிறைந்து

துன்னிய தீவினைத் துகள்தீர்

முன்னிய பொருளது முடிகவெமக் கெனவே.

(54)

கடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு

கடையில்லா அறிவோடு ஞானமும் காட்சியும்

உடைமையா யுலகேத்த ஒண்பொருள தியல்புணர்ந்து

மறவாழி இறையவரும் மாதவரும் புடைசூழ அறவாழி வலனுயரி யருள்நெறியே அருளியோய்.

தாழிசை

வினையென்னும் வியன்பகையை வேரொடு முடன்கீழ்ந்து முனையவர்கள் தொழுதேத்த இருப்பதுநின் முறைமையோ,

பொருளாடல் புரியீரேல் புகர்தீரும் என அருளி

மருளானா மணியணைமேல் மகிழ்வதுநின் மாதவமோ,

வேந்தர்க்கும் முனைவர்க்கும் விலங்கிற்கும் மருள்துறவா தோந்தீரத் துறந்தநின் துறவரசுந் துறவாமோ.

அராகம்

முழுவதும் உணர்பவர் முனைவருள் முனைவர்கள்

தொழுதெழு துதியொலி துதைமலர் அடியினை