பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

பேரெண்

நிழல்மணி விளையொளி நிகர்க்கும் நின்னிறம்

எழில்மதி இதுவென இகலும் நின்முகம்.

இடையென்

கருவினை கடந்தோய்நீ.

காலனை யடர்ந்தோய்நீ.

ஒருவினையும் இல்லோய்நீ.

உயர் கதிக்கு முனைவன்நீ.

அறவன்நீ, அமலன்நீ.

அருளும்நீ. பொருளும்நீ.

உறவுநீ. உயர்வுநீ.

உலகுநீ. அலகுநீ.

சிற்றெண்

எனவாங்கு,

சுரிதகம்

அருளுடை ஒருவநின் அடியிணை பரவுதும்

இருளுடை நாற்கதி யிடர்முழு தகலப்

பாடுதற் குரிய பல்புகழ்

வீடுபே றுலகம் கூடுக எனவே.

(55)

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு

தெரிவில்லா வினைகெடுத்துத் தீவினையிற் றெரிந்தோங்கிச் சரிவில்லா இன்பத்தால் சங்கரனும், முழுதுலகும்

தெரிந்தொன்றி யுணர்ந்தநின் திப்பியஞா னந்தன்னால்

விரிந்தெங்கும் சென்றமையால் விண்ணுமாய் மண்ணின்மிசை தேர்வுற்ற வாரீட நான்மையினும் திரிவில்லாச்

சார்வுற்ற நன்மையினும் சதுமுகனாய் உயர்ந்தனையே.