பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

தாழிசை

இருக்கையு நூனெறிய தியல்வகையுந் தன்னாலும்

வருத்தாத கொள்கையால் மன்னுயிரைத் தலையளிப்போய் தொடர்த்தமுக்கும் பிணியரசன் தொடர்ந்தோட ஞானத்தால் அடர்த்தமுக்க வென்றதுநின் அறமாகிக் காட்டுமோ.

ஏதிலா வுயிர்களை எவ்வகைக் கதியகத்தும் காதலால் உழப்பிக்கும் காமனைக் கறுத்தவன் வடிவுகெடச் சிந்தையால் எரித்ததூஉம் வல்வினையைப் பொடிபட வென்றதுநின் பொறையுடைமை ஆகுமோ. எவ்வுயிர்க்கும் ஓரியல்பே என்பவை தமக்கெல்லாம் செவ்விய நெறிபயந்து சிறந்தோங்கு குணத்தகையாய் கொலைத்திறத்தால் கூட்டுண்ணுங் கூற்றப்பே ரரசனுங்க அலைத்தவனை வென்றதுநின் அருளாகிக் கிடக்குமோ.

அராகம்

தாதறு நனைசினை தழலெழில் சுழல்சுழற் கைவகை முகைநகு தடமலர் அசோகினை சீரூறு கெழுதகு செழுமணி முழுதணி

செறியுளை விலங்கரை சணிபொளி னணையினை.

வாருறு கதிரெதிர் மரகத நிரை நிரை

வரிபுரி தெளிமதி வெருவரு குடையினை போருறு தகையன புயலுளர் வியலொளி புதுமது நறவின புனைமலர் மழையினை. பொறிகிளர் அமரர்கள் புகலிடம் எனமனு பொலிமலி கலிவெலும் பொருவறும் எயிலினை. வெறிகிளர் உருவின விரைவினி னினிதெழ வெறிவரு தெரிதக வினிதுளர் கவரியை. விறலுணர் பிறவியை வெருவரு முறைதரு வியலெரி கதிரென மிடலுடை ஒளியினை. அறிவுள ரமரர்கள் அதிபதி யிதுவெனக் கடலுடை யிடிபட வெறிவன விசையினை.

225