பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

பேரெண்

மன்னுயிர் காத்தலான் மறம்விட்ட அருளினோடு இன்னுயிர் உய்கென்ன இல்லறமும் இயற்றினையே. புன்மைசால் அறநீக்கிப் புலவர்கள் தொழுதேத்தத்

தொன்மைசால் குணத்தினால் துறவரசாய்த் தோற்றினையே.

இடையெண்

பீடுடைய இருக்கையைநின் பெருமையே பேசாதோ வீடுடைய நெறிமையைநின் மேனியே விளக்காதோ. ஒல்லாத வாய்மையைநின் உறுபுகழே யுரையாதோ. கல்லாத அறிவுநின் கட்டுரையே காட்டாதோ.

சிற்றெண்

அறிவினால் அளவிலைநீ. அன்பினால் அசைவிலைநீ. செறிவினால் சிறந்தனைநீ. செம்மையால் செழுங்கதிர்நீ. காட்சியால் கடையிலைநீ. கணஞ்சூழ்ந்த கதிர்ப்பினைநீ. மாட்சியால் மகிழ்வினைநீ. மணிவரைபோல் வடிவினைநீ.

அளவெண்

வலம்புரி கலந்தொருபால் வால்வளைஞி மிர்ந்தொருபால் நலந்தரு கொடியொருபால் நலம்புணர் குணமொருபால் தீதறு திருவொருபால் திகழொளி மணியொருபால் போதுறு மலரொருபால் புணர்கங்கை யாறொருபால் ஆடியின் ஒளியொருபால் அழலெரி யதுவொருபால் மூடிய முரசொருபால் முழங்குநீர்க் கடலொருபால் பொழிலொடு கயமொருபால் பொருவறு களிறொருபால் எழிலுடை ஏறொருபால் இணையரி மானொருபால். எனவாங்கு,

சுரிதகம்

இவைமுத லாகிய இலக்கணப் பொறிகிளர்

நவையில் காட்சி நல்லறத் தலைவநின்

தொல்குணந் தொடர்ந்துநின் றேத்துதும், பல்குணப் பெருநெறி யருளியெம் பிறவியைத் தெறுவதோர்

வரம்மிகத் தருகுவை எனநனி

பரவுதும் பரமநின் அடியிணை பணிந்தே.

(56)