பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ

8. பன்னிரண்டு சூரியர் (துவாதச ஆதித்தர்)*

சைவ சமயத்துத் தெய்வங்களில் பன்னிரண்டு சூரியர்கள் உள்ளனர். சமய நூல்கள் பன்னிரண்டு சூரியர்களைக் கூறுகின்றன. அவர்களுடைய பெயர்களாவன. 1. வைகர்த்தர், 2. விவஸ்தர், 3. மார்த் தாண்டர், 4. பாஸ்கரர், 5. இரவி, 6. உலோகப்பிரகாசர், 7. உலோகசாட்சி, 8. திரிவிக்ரமர், 9. ஆதித்தர். 10. சூரியர். 11. அம்சுமாலி, 12. திவாகரர் இவர்கள் ஒவ்வொருவரும் பன்னிரண்டு திசைகளில் இருக்கின்றனர்.

32

66

‘கல்வெட்டு” தொல்பொருள் ஆய்வுத் துறை-காலாண்டு இதழ் இராட்ச ஆண்டு, ஆடித்திங்கள், 6ஆம் இதழ்.

இவர்கள் உருவம் நின்ற நிலையில் அமைக்கப்படும். இவர்கள் உருவங்களின் அமைதியும் கூறப்படுகின்றன. அந்த விபரங்கள் வருமாறு:

1. வைகர்த்தர்:

இவர் ஒரு முகமும் இரண்டு கைகளும் உள்ளவர். இரண்டு கைகளில் பொற்றாமரைப் பூவை நாணத்தோடு பிடித்துத் தோளின்

கல்வெட்டு

தொல்பொருள் ஆய்வுத்துறை இதழ் -6 (1975)