பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

மேல் வைத்திருப்பார். மஞ்சள் நிற ஆடை அணிந்து பொன் அணிகள் அணிந்திருப்பார்.

2. விவஸ்தர்:

இவருக்கு இரண்டு முகங்களும் நான்கு கைகளும் உண்டு. மேல் இரண்டு கைகளில் தாமரைப் பூக்களை ஏந்தித் தோளின் மேல் சார்த்திக் கொண்டு கீழ் இரண்டு கைகளில் அபய முத்திரையும் வரத முத்திரையும் உள்ளவராக இருக்கிறார். சிவந்த நிறமான பவள நகைகளை அணிந் திருப்பார். பிங்கள நிற ஆடை அல்லது பொற் பட்டாடை அணிந்திருப்பார். 3. மார்த்தாண்டர்:

இவருக்கு மூன்று முகங்களும் ஆறு கைகளும் உண்டு. மேல் இரண்டு கைகளில் தாமரைப் பூக்கள். இரண்டு கைகளில் ஜபமாலையும் கமண்டலமும் ஏந்தியிருப்பார். இரண்டு கைகளில் அபய வரத முத்திரைகள், முத்து மாலைகளை ஆபரணங்களாக அணிந்திருப்பார். 4. பாஸ்கரர்:

இவருக்கு இரண்ட முகங்களும் நான்கு கைகளும் உண்டு. இரண்டு கைகளில் தாமரைப் பூக்கள் ஏந்தியிருப்பார். மற்ற இரண்டு கைகளைக் கூப்பிச் சிவபெருமானைக் கும்பிடும் நிலையில் இருப்பார். சிவப்பு நிறமுள்ளவர். சிவந்த ஆடை அணிந்திருப்பார். நீலக்கற்கள் பதித்த நகைகளை அணிந்திருப்பார்.

5. இரவி:

இவர் நான்கு முகங்களையும் எட்டுக் கைகளையும் உடையவர். கைகளில் ஜபமாலை கமண்டலம், சூலம், பாசம், அங்குசம், தாமரை, அபயவரத முத்திரைகள் இருக்கும். சிவந்த நிற ஆடை அணிந்து, பச்சைக் கல் (மரகதக் கல்) இழைத்த ஆபரணங்கள் அணிந்திருப்பார். 6. உலோகப் பிரகாசர்:

ஐந்து முகமும் பத்துக் கைகளும் உள்ளவர். இவர் நிறம் கறுப்பு. இரண்டு கைகளில் தாமரைப் பூக்கள். இரண்டு கைகளில் சூலம், அங்குசம். மற்றும் இரண்டு கைகளில் தண்டு ஜபமாலை. இன்னும் இரண்டு கைகளில் அம்பு வில். நீல நிறப்பட்டாடை உடுத்து நீல நிறக்கற்கள் பதித்த நகைகளை அணிந்திருப்பார்.