பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

பெருமானுக்கும் திருமாலுக்கும் திருக்கோவில்கள் ஒரே இடத்தில் அமைந்திருந்தன. பல இடங்களில் சிவனும், திருமாலும் ஒரே கோவிலில் வழிபடப்பட்டனர். பிற்காலத்திலே சைவ சமயம் என்றும் வைணவ மதம் என்றும் தனித் தனி மதங்களாகப் பிரிக்கப்பட்டது போல, பழங்காலத்தில் பிரிக்கப்படாமல் இரண்டு தெய்வங்களும் ஒரே சமயக் கடவுளர்களாக வழிபடப்பட்டனர். ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்தில்கூட சைவ வைணவ மதப் பிரிவு ஏற்படாமல், சிவன்-திருமால் வழிபாடு ஒன்றாகவே நிகழ்ந்து வந்தது. ஏறத்தாழ கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வரையில் இவ்விதமாக இருந்தது. சிவனும், திருமாலும் ஏற்றத் தாழ்வில்லாமல் வழிபடப் பட்டதற்குச் சான்றுகள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும் தேவாரத்திலும் காணப்படுகின்றன.

66

'தாழ்சடையும் நீள்முடியும் ஒள்மழுவும் சக்கரமும்

சூழ் அரவும் பொன்நாணும் தோன்றுமால்,- சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இருந்து

என்று பேயாழ்வார் அருளிச் செய்தார்.

99

"தேசனைத் தேசமாகுந் திருமாலோர் பங்கன் தன்னைப் பூசனைப் புனிதன்தன்னைப் புணரும் புண்டரீகத் தானை. வடிகொண்டார்ந் திலங்கு மழுவான் கைக் கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்.'

என்றும்;

66

'சீரேறு திருமாலோர் பாகத்தான்காண்

திருவாரூரான்காண் என் சிந்தையானே

என்றும்

"தீர்த்தன்காண் திருமாலோர் பாகத்தான்காண்

என்றும் அப்பர் சுவாமிகள் அருளிச் செய்தார்.

99

இதனால், சிவன் வேறு, திருமால் வேறு, என்னும் பிரிவுகள் தோன்றிக் கொண்டிருந்த ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்திலுங் கூட சிவபெருமானும் திருமாலும் ஆகிய இரு பெருங் கடவுளர் ஒரு தன்மையராக வழிபடப்பட்டனர் என்பது தெரிகின்றது.