பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

அரிதவித் தாசின் றுணர்ந்தவன் பாதம்

விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்

துரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்

பெரியதன் ஆவி பெரிது.

என்பது பழமொழி நானூறு.

இச்சமயக்

கொள்கையை

அடிப்படையாகக் கொண்டு

ஆருகதர் தமது தீர்த்தங்கரருக்கு மிகப் பெரிய உருவத்தைக் கற்பித்தார்கள் போலும். மிகப் பெரிய உருவத்தைக் கற்பித்ததற்கேற்ப மிக நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள் போலும். இவ்விரண்டு கற்பனைகளையும் தள்ளி விடுவோமாயின், தீர்த்தங்கரர் உண்மையில் இருந்த பெரியார் என்பது விளங்கும்.

தீர்த்தங்கரர் அனைவரும் உண்மைப் பெரியார் என்றே கொள்வோம். ஆனால், இவர்கள் அனைவரும் சரித்திர காலத்துக்கு உட்பட்டவர் அல்லர். முதல் பத்தொன்பது தீர்த்தங்கரர்கள் சரித்திரகாலத்துக்கு முற்பட்டவராகக் காணப்படுகின்றனர். கடைசி ஐந்து தீர்த்தங்கரர்க ளாகிய முனிசுவர்த்தர், நமிநாதர், நேமிநாதர், பார்சுவநாதர், மகாவீரர் என்பவர்கள் சரித்திர காலத்துக்குட்பட்டவராவர். எப்படி என்றால், கூறுதும்.

இராமாயணக் கதையையும் பாரதக் கதையையும் சரித்திரக் கதைகளாக ஒப்புக் கொண்டு வரலாற்றாசிரியர் இந்திய சரித்திரத்தை எழுதி வருகிறார்கள். இந்திய சரித்திரத்தின் தொடக்கத்தில் இராமாயண, பாரதக் கதைகள் கூறப்படுகின்றன. இக்கதைகள் இந்துக்களுக்கு (சைவ வைணவர்) உள்ளதுபோலவே சமணர்களுக்கும் உள்ளன. இந்து, சமண இராமாயண பாரதக் கதைகளில் சில சிறு மாறுதல்கள் காணப்படுகிற போதிலும் இரண்டும் ஒரே கதைகளாகும். இராமாயணமும் பாரதமும் இந்திய சரித்திரத்தில் இடம்பெற்று இருக்கிறபடியால், இராமாயண காலத்தில் இருந்த 20 ஆவது தீர்த்தங்கரராகிய முனிசுவர்த்தரும், அவருக்குப் பின் இருந்த நமிநாதர் என்னும் 21 ஆவது தீர்த்தங்கரரும், அவருக்கு பிறகு பாண்டவர் கண்ணபிரான் காலத்தில் இருந்தவராகிய 22 ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாதரும்? அவருக்குப் பிறகு இருந்த பார்சுவநாத தீர்த்தங்கரரும், அவருக்குப் பிறகு புத்த பகவான் காலத்தில் இருந்த 24 ஆவது தீர்த்தங்கரராகிய மகாவீரரும் சரித்திர காலத்தில் இருந்தவர் ஆவர்.