பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

இவ்வைந்து பொருள்களும் தங்குவதற்கு இடம் கொடுப்பது ஆகாயம்.

66

ஆகாயம் எல்லாப் பொருட்கும்

பூக்கும்இடங் கொடுக்கும்புரிவிற் றாகும்"

(மணிமேகலை, 27 : 193 - 194)

ஆகாயம் லோகாகாயம் என்றும், அலோகாகாயம் என்றும் இரண்டு வகைப்படும். லோகாகாயம் என்பது, மேலே கூறியபடி புத்கலம் முதலிய ஐந்து பொருள்களுக்கும் இடம் கொடுப்பது. அலோகாகாயம் என்பது லோகாகாயத்திற்கு இடங்கொடுத்து நிற்பது. இவையே உயிரல்லனவாகிய அஜீவப் பொருள்களாம்.

3,4, புண்ணியம், பாவம்:

(நல்வினை, தீவினை) (இவற்றை மேலே அஜீவப் பொருள்களில் கூறப்பட்ட தர்மம், அதர்மம் எனக் கருதுவது தவறு. இவை வெவ்வேறு பொருள்கள் என்பது மேலே விளக்கப்பட்டது) இந்தப் புண்ணிய பாவங்கள் மூன்று வகையாக உயிருடன் கலக்கின்றன. மனத்தினால் நினைப்பதும், வாக்கினால் சொல்வதும், காயத்தினால் செய்வதும், ஆக மூன்று வகை நல்ல எண்ணங்களாலும் நல்ல சொற்களினாலும் நல்ல செய்கை களினாலும் பெறப்பட்ட புண்ணியமானது, உயிர்களை மனித ராகவும், தேவராகவும் பிறக்கச் செய்து அறிவு, செல்வம், இன்பம், புகழ், மேன்மை, சிறப்பு முதலிய நன்மைகளையடையச் செய்கிறது. தீய எண்ணங் களாலும், தீய சொற்களாலும், தீய செய்கை களினாலும் உண்டான பாவமானது உயிர்களை நரககதி, விலங்குகதி முதலிய இழிந்த பிறப்புக்களில் பிறக்கச் செய்து அறிவின்மை, துன்பம், இகழ்ச்சி, வறுமை, சிறுமை முதலிய துன்பங்களை அடையச் செய்கிறது.

5. ஊற்று (ஆஸ்ரவம்) :

நீர் ஊற்றுக்களில் நீர் சுரப்பது போல, நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளும் உயிரில் சுரப்பது (சேர்வது) ஊற்று எனப்படும். மனம், வாக்கு, காயங்களின் வழியாக ஊற்றுக்கள் உயிரிடம் வந்து சேர்கின்றது. இதனைக் கன்மத் தொடர்ச்சி அல்லது பொறிவழிச் சேறல் என்றும் கூறுவர்.