பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

6. செறிப்பு (ஸம்வரை) :

33

மேலே கூறப்பட்ட இருவினை களும் சுரக்கும் ஊற்றினது வழியை அடைத்து விடுவது செறிப்பு அல்லது ஸம்வரை எனப்படும். உயிர், முன்பு செய்த இருவினைகளை மறுபிறப்பில் துய்த்து ஒழிக்கும் போதே புதிதாக வினைகளைச் செய்து மீண்டும் கர்மத்தைத் தேடிக் கொள்கின்றன. உயிர்கள் தாம் முன்பு செய்த வினைப்பயன்களைத் துய்த்து ஒழிக்கும் போது, புதிய கர்மங்கள் வந்து சேராதபடி தடுக்க வேண்டும். அவ்வாறு தடுப்பதுதான் செறிப்பு என்பது. ஒரு குளத்திற்கு நீர்வரும் கால்வாய்களை அடைத்துவிட்டால், அக்குளத்தில் மேன் மேலும் நீர் பெருகாமல் தடைபடுவது போன்று, மனம், வாக்கு, காயம், ஐம்புலன் முதலியவற்றை அடக்கி உயிரினிடத்தில் மேன்மேலும் இருவினைகள் சுரவாதபடி தடுத்தலே செறிப்பு ஆகும்.

7. உதிர்ப்பு (நிர்ஜரை) :

இருவினை ஊற்று உயிரினிடத்து மேன்மேலும் பெருகாதபடி தடுத்தபின்னர், அனுபவித்துக் கழிக்காமல் எஞ்சி நின்ற வினைகளைக் களைந்து விடுவதற்கு உதிர்ப்பு அல்லது நிர்ஜரை என்பது பெயர். இதனைத் துவாதச தபம், குப்தி, சமிதி, தருமத்தியானம், சுக்கிலத் தியானம் முதலியவற்றால் செய்யவேண்டும்.

66

'வரும்பாவம் எதிர்காத்து மன்னுந்தம் பழவினையும் ஒருங்காக உதிர்த்தக்கால் உயிர்த்தூய்மை வீடென்றாள்.

- (நீலகேசி, மொக்கல 312.)

இதன் பொருள், "வருகின்ற கர்மங்களைக் குப்தி,சமிதி முதலாயினவற்றால் அடைந்து தபஸ் ஸம்ய மாதிகளால் நின்ற கர்மங்களை நிர்ஜரிப்பித்தல் (உதிர்த்தல்) ஆத்மாவின் கண் மல நீக்கத்தால் பிறக்கின்ற சுத்தியே வீடாவதென்று சொல்லுவது (சமயதிவாகர வாமன முனிவர் உரை)

8. கட்டு (பந்தம்):

و,

மனம், வாக்கு, காயம், ஐம்புலன் முதலியவற்றால் உண்டான வினைகள் உயிருடன் ஒன்றிக் கலப்பது கட்டு அல்லது பந்தம் எனப்படும். பழுக்கக் காய்ந்த இரும்பில் நீரைத் தெளித்தால், அவ் விரும்பு நீரை இழுத்துக் கொள்வது போலவும், பாலுடன் நீரைக் கலந்தால் இரண்டும் ஒன்றுபடுவது போலவும் வினைகள் உயிருடன்