பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

37

நினைக்கவும் மாட்டேன்; மற்றவர் கொல்வதற்கும் மனம், மொழி, மெய்களால், உடன்படவும் மாட்டேன்” என்று உறுதி கூறிச் சமண முனிவர் அகிம்சா விரதத்தை மேற்கொள்கிறார்.

2. வாய்மை :

وو

அஃதாவது பொய்யாமை. "பொய்யாமை யாவது, தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். சமணசமயக் கொள்கை யின்படி, வாய்மை என்பது, மேற்கூறிய அகிம்சையை அடிப்படை யாகக் கொண்டது. ஒருவன் ஓர் உயிரைக் கொல்லத் துணிவா னாயின், அவ்வமயம் பொய் சொல்லியாகிலுங் கொலையினின்றும் அவ்வுயிரைக் காப்பாற்ற வேண்டியது, சமணத் துறவியின் கடமையாகும். ஓர் உயிரைக் காப்பாற்றப் பொய் சொல்லுவது வாய்மையினுள் அடங்கும் என்பது சமணரின் ஓத்து. இக்காரியத்துக்காக மட்டும் பொய் சொல்லலாமே தவிர மற்றப்படி சமணத் துறவிகள் சிறிதும் பொய் பேசக்கூடாது என்பதும், மனம், மொழி, மெய்களால், மெய்பேசுவதை மேற் கொண்டொழுக வேண்டும் என்பதும் சமண சமயக் கொள்கை யாகும். வாய்மையைப் பற்றி நீலகேசி (மொக்கல. 60ஆம் செய்யுள்) உரையில் கூறப்பட்ட செய்தி ஈண்டுக் குறிப்பிடத்தக்கது:

66 என்னை?

"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்

(குறள். 212)

என்பது எம் (சமணரின்) ஓத்தாதலால், பிராணி பீடா நிவர்த்தியார்த்த மாகப் பொய்யுரைத்தலும் ஆவதாகலின் என்பது நன்மை பயக்கச் சொல்லும் பொய் குற்றமற்றென்பது

66

وو

ஆகலின்

“நான் எப்பொழுதும் மெய்ம்மையே பேசுவேன்; ஒரு போதும் பொய் பேச மாட்டேன்; பிறர் பொய் பேசுவதை உடன் படமாட்டேன்; பிறரைப் பொய் பேசத் தூண்டவும் மாட்டேன்; மனம், மொழி, மெய்களால் முக்காலங்களிலும் மெய்ம்மையே பேசுவேன்,” என்று உறுதி கூறி ஆருகத முனிவர் வாய்மை என்னும் விரதத்தை மேற்கொள்கிறார்.