பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

குஞ்சத்தை அவர் கையில் வைத்திருப்பார். இதுவே இரியா சமிதி எனப்படும்.

2. பாஷா சமிதி :

நாவடக்கம் அல்லது வாக்கடக்கம், பழித்துப் பேசுதல், புகழ்ந்து பேசுதல், கோபமாகப் பேசுதல், கடுஞ்சொற் கூறல் முதலிய பேச்சுக்களை நீக்கி இனிமையாகப் பேசுவதையும், தரும ஒழுக்கம் சமயக் கொள்கை இவற்றைப் போதிப்பதையும் துறவி தமக்கு ஒழுக்கமாகக் கொள்வது பாஷா சமிதி எனப்படும்.

3. ஏஷணா சமிதி :

நாற்பத்தாறுவகையான குற்றங்கள் இல்லாத உணவைச் சமணத் துறவி யாசித்துப் பெற்று அதிகமாக உண்ணாமல் அளவாக உண்ணுதல் ஏஷ்ணா சமிதியாகும். உணவின் நாற்பத்தாறுவகைக் குற்றங்களைச் சமண நூல்களில் கண்டுகொள்க.

4. ஆதான நிக்ஷேபனா சமிதி :

சமண முனிவருக்குரிய நூல் (புத்தகம்), குஞ்சம் (மயிற்பீலி), கமண்டலம் என்னும் இப்பொருள்களை எடுக்கும்போதும் வைக்கும்போதும் எறும்பு முதலிய சிற்றுயிர்கள் இறந்துபோகாத படி விழிப்போடு இருந்து பைய எடுத்தலும் பைய வைத்தலுமாம்.

5. உத்சர்க்க சமிதி :

சமணத் துறவி மலமூத்திரங் கழிக்கும்போது ஊருக்கு அப்பால், ஒருவரும் நடமாடாததும் பாராததுமான இடத்தில் கழிக்க வேண்டும். அன்றியும் புழு, பூச்சிகள் உள்ள இடங்களிலும் வளை முதலியவை உள்ள இடங்களிலும் கழிக்கக் கூடாது.

ஐம்பொறி அடக்கம் :

ஐம்பொறிகளின் வாயிலாகவே நல்வினை, தீவினைகள் உயிரைப் பற்றிப் பிணித்து, அதனைப் பிறப்பு இறப்புகளிற் செலுத்துகிற படியால் ஐம்பொறிகளை அடக்க வேண்டுவது துறவிகள் கடமை. நாட்டியம், நடனம் முதலிய காட்சிகளைக் காண்பதும், பாட்டு, யாழ், வீணை முதலிய இசைகளைக் கேட்பதும், சந்தனம், பூ முதலியவற்றின் நறுமணங் களை முகர்வதும், அறுசுவையுணவுகளை உண்பதும், ஊறு என்னும் புலனுக்கு இன்பமளிக்கிற பொருள்களைத் தொடுதல்