பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

43

களையும்போது தேகத்தில் உண்டாகும் பொறுத்தற்கரிய பெரிய வலியைப் பொறுத்துக் கொள்வது, சமணத் துறவியின் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றலையும், மனவலிமையையும் தேகத்தின் மேல் பற்றின்மையையும் காட்டுகிறது.

2. திகம்பரம் :

அஃதாவது நிர்வாணமாக இருத்தல். நகை முதலியவற்றை நீக்கித் துணி, தோல், மரவுரி, இலை முதலியவற்றாலும் உடலை மூடாமல் திகம்பரமாக (ஆகாயமே உடையாக) இருத்தல். "பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை” எனக் கண்டு தமது உடலையும் தமதன்று என உடற் பற்றையும் நீக்கிய சமணமுனிவர், அது தொடர்பான உடை உடுத்தல் முதலியவற்றையும் நீக்கி முழுத்துறவு கொள்வர். அன்றியும், வெயிலின் வெம்மையும் குளிரின் தண்மையும் தேகத்தில்பட்டால் அவற்றையும் பொறுத்துக் கொள்வதும், எறும்பு கொசு முதலியவை கடித்தால் அத் துன்பங்களையும் தாங்கிகொள்வதும் உடம்பு தமதன்று எனத் துணிந்த சமணமுனிவரின் கடமையாம்.

6

3. நீராடாமை -

உயர்ந்தபடியிற்

துறவு நிலையின் சென்று உடம்பும் தமதல்லவென்று துறந்து அதற்கு உடையுடுத்துவதும் பற்றுக்குக் காரணமாகும் என்று கருதித் திகம்பர நிலையை மேற்கொண்ட சமண முனிவர் உடம்பில் உண்டாகும் வியர்வை அழுக்கு முதலியவற்றைக் கழுவிப் போற்ற மாட்டார். நீராடிச் செய்யும் புறத்தூய்மையைவிட அகத் தூய்மையே சிறந்ததெனக் கருதுவர் சமண முனிவர். இதுபற்றி நீலகேசி உரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 'இந்திரிய ஜயார்த்தமாக அஸ்நான (நீராடாமை) விரதங்கொண்டதல்லது யாங்கள் சரீரத்து மலமாக்க வேண்டு மென்று சொல்லியதூஉம் செய்ததூஉம் இல்லை' (மொக்கல. 318 ஆம் பாட்டுரை)

"செற்றம்விட்டார் திருமேனியெல்லாம் மாசுவிம்ம வற்றவிட்டார்

என்பது திருநூற்றந்தாதி.

நம்தொழு தெய்வமே’

சமணமுனிவர் நீராடாமைக்கு இன்னொரு காரணமும் இருக்கக்கூடும். நீரில் மிகச் சிறிய கண்ணுக்குப் புலப் படாத உயிர்கள் உள்ளன என்பது சமண மதக் கொள்கை. சிற்றுயிரையும் கொல்லாத