பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

அகிம்சா விரதத்தை முதன்மை யாகக் கொண்ட சமணமுனிவர். உடற் றூய்மைக்காக நீராடினால் அந்நீரில் உள்ள நுண்ணுயிர்கள் ஊறுபட்டு இறந்துபடும் என்றஞ்சிப்போலும் அவர் நீராடா தொழிந்தது எனக் கருதுவதும் பொருந்தும். நீரில் உயிர் அணுக்கள் உள்ளமைபற்றியே சமணமுனிவர் நீருண்ணும் போது ஏழுமுறை வடிகட்டிய பின்னர்க் குடிக்க வேண்டும் என்னும் ஒழுக்கத்தைச் சட்டமாக வைத்துள்ளனர். 4. தரையிற் படுத்தல் :

பாய் படுக்கைகளின்றித் தரையின் மீது படுத்து உறங்கும் போது கல் மண் உறுத்துவதனால் உண்டாகும் வேதனை களைப் பொறுத்தல். படுக்கும்போது இடது அல்லது வலது பக்கமாகப் படுக்கவேண்டும் என்பதும், குப்புறப் படுப்பதும் மல்லாந்து படுப்பதும் கூடாது என்பதும் கட்டளை. எறும்பு, புழு பூச்சிகள் நசுங்கி இறவாதபடி அவை இல்லாத இடங்களில் படுக்க வேண்டும்.

5. பல் தேய்க்காமை :

உடம்பும் மிகை என்று தமது உடம்பையுங் துறந்த சமண முனிவர் பல் தேய்த்துச் சுத்தம் செய்யார். அப்படிச் செய்வது, தாம் புறக்கணித்துவிட்ட உடம்பின்மீது மீண்டும் பற்றினை உண்டாக்கும் எனக் கருதுவர். இதனால், அவர்கள் தமது உடலையுங்கூட எவ்வளவு திடமாகக் புறக்கணித்தனர் என்பது அறியப்படும்.

6. நின்று உண்ணல் :

சமண முனிவர், நின்றபடியே உணவை உட்கொள்ள வேண்டும். இலை முதலிய உண்கலங்களில் உண்ணாமல் கையில் வாங்கிப் புசிக்க வேண்டும். தமது அன்று என்று உடற்பற்றினையும் நீக்கி விட்ட அவர்கள், அதற்குச் சுகங்கொடுத்து ஆசனத்தில் அமர்ந்து உண்கலத்தில் உண்பது அதனிடத்துப் பற்றுக் கொண்டு அதனைப் போற்றி வளர்ப்பதற்குக் காரணம் ஆகும் எனக் கருதி, இவ்வாறு நின்றவண்ணமே கையில் உண்பர்.

7. ஏகபுக்தம் :

ஒரு நாளைக்கு ஒரே வேளை உண்ணுதல். சமண முனிவர்களில் சிலர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை உண்ணும் விரதத்தையும் கொண்டிருந் தனர். எட்டு நாட்களுக்கு ஒரு முறை உணவு கொண்ட அட்டோப வாசிகள் சாசனங்களில் கூறப்