பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழகச் சமயங்கள் - சமணம்

57

என்று சங்க நூல்களினால் அறிகிறோம். அன்றியும் அவர்கள் அக் காலத்தில் சமண மதத்தவராக இருந்தனர் என்பதும் ஆராய்ச்சியினால் விளங்குகிறது. அகத்தியருடன் வந்த அருவாளர் தொண்டை நாட்டில் குடியேறினார்கள். அவர்கள் குடியேறிய பிறகு தொண்டை நாட்டிற்கு அருவாநாடு (அருவாளர் நாடு) என்று பெயர் உண்டாயிற்று. அருவாளரும் அக்காலத்தில் சமண மதத்தராக இருந்தனர் என்று கருதப்படுகின்றனர். நெல்லூர் மாவட்டம் கண்டகூர் தாலுகாவைச் சேர்ந்த மாலகொண்டா என்னும் மலைமேல் உள்ள ஒரு குகையில் கி.மு.3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சாசனம் ஒன்று காணப் படுகிறது. இது பிராகிருத மொழியிலே பிராமி எழுத்தினால் எழுதப் பட்டிருக்கிறது. அருவாஹி(ள) குலத்து நந்த செட்டி மகன் சிறீவீரி செட்டி செய்வித்த குகை” என்று இந்தச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது.5

66

6

5

இதில் கருத வேண்டியது என்னவென்றால், தமிழ் நூல்களில் அருவாளர் என்று கூறப்படுபவர் தாம் இச் சாசனத்தில் அருவாஹிள குலம் என்று கூறப்படுகிறார் என்பதும் இந்தக் குகை சமணத் துறவி களுக்காக அமைக்கப்பட்டது என்பதும் அருவாளர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தனர் என்பதும் ஆகும். இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்தச் சாசனம் காணப்படுகிற இடம் பண்டைக் காலத்தில் தமிழ்நாடாக (தமிழ்நாட்டின் வட எல்லையாக) இருந்தது என்பதே. கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இருந்த டாலமி என்னும் யவன ஆசிரியர் அருவார்னொய் (Aruvarnoi) என்னும் இனத்தார் இந்தப் பகுதியில் (தொண்டை நாட்டில்) வாழ்ந்தனர் என்று கூறுவது இந்த அருவாளரைத்தாம் போலும்.

கண்ணபிரான் மரபினராகிய பதினெண்குடி வேளிரும், அரு வாளரும் சமணசமயத்தவராக இருந்ததோடு அவர்கள் தென்னாட்டிற்கு வந்தபிறகு கண்ணன், பலராமன் என்னும் இருவரையும் வழிபடும் வழக்கத்தைத் தமிழ்நாட்டில் நிலை நாட்டினார்கள் என்றும் தெரிகிறது. கண்ணன், பலராமன் வணக்கம் சங்ககாலத்திலே தமிழ்நாட்டில் சிறப் புற்றிருந்தது என்பதைச் சங்கநூல்கள் பல இடங்களில் கூறுகின்றன. வைணவமதம் தலை எடுத்த பிற்காலத்திலே பலராமன் வணக்கம் மறக்கப்பட்டுக் கண்ணபிரான் வணக்கம் மட்டும் (கண்ணன் திருமாலின் அவதாரம் என்னும் முறையில்) கைக்கொள்ளப்பட்டது. இதுபற்றி ஆதாரத்துடன் தெளிவாக எழுதப்புகுந்தால் இடம் விரியும் ஆகலின் இதனோடு நிறுத்துகிறோம்.