பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

இச்செய்திகளை இங்குக் குறிப்பிட நேர்ந்த காரணம் என்ன வென்றால், கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கும் பல நூற்றாண்டு களுக்கு முன்னரே - கண்ணபிரான் வாழ்ந்திருந்த மகாபாரதக் காலத்திலேயே - சமணசமயம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்பதைக் கூறுவதற்கே யாகும். கண்ணபிரான் தொடர்புடைய பாரதப்போர் நிகழ்ச்சியைச் சரித்திர நிகழ்ச்சியாக இந்திய சரித்திர நூல்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற படியினாலே, கண்ணபிரான் காலத்தில் இருந்த அவர் உறவினரான நேமிநாத தீர்த்தங்கரரும் சரித்திர காலத்தவர் ஆவார். ஆகவே, நேமிநாத தீர்த்தங்கரர் காலத்திலே-கண்ணபிரான் பாரதப்போர் செய்த அந்தக் காலத்திலே அகத்திய முனிவருடன் தமிழ்நாடு வந்த பதினெண்குடி வேளிர் அருவாளர் ஆகிய இவர்கள் மூலமாகச் சமணசமயம் தமிழ்நாட்டிற்கு வந்திருத்தல் கூடும். மிகப்பழைய அந்தக் காலத்திலே சமயப்பகையும் காழ்ப்பும் அதிகமாகப் பாராட்டப்பட வில்லை; சமயப் பகையும் மதப் போர்களும் நிகழ்ந்தது மிகப் பிற்காலத்திலேயாகலின், சமரச நோக்கமுடைய மிகப்பழைய காலத்தில் எல்லா மதங்களும் சகோதர பாவத்துடன் இருந்தன. தமிழ்நாட்டிலிருந்த மதங்களில் மிகப் பழமையானது சமணமதம் என்பதில் யாதோர் ஐயமும் இல்லை.

அடிக்குறிப்புகள்

1. சல்லேகனை என்னும் தொடர்புரை காண்க.

2. மௌரியர் அல்லது மோரியர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து வந்தனர் என்று சங்க நூல்களில் கூறப்படுகிற நிகழ்ச்சி இச் சந்திர குப்த அரசன் காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர்களில் சிலர் கருதுகின்றனர்.

3. வடக்கிருத்தல் ருத்தல் - சல்லேகனை என்னும் தொடர்புரை காண்க. மகாவம்சம். x 97,98,99.

4.

5.

No. 531 of 1937-38 Annual Rep. South Indian Epi. 1938