பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

இரண்டாவதாகிய அடைக்கல தானத்தையும் சமணர் பொன் போல் போற்றிவந்தனர். அச்சங்கொண்டு அடைக்கலம் என்று புகல் அடைந்தவருக்கு அபயமளித்துக் காப்பது அபயதானம் என்பது. இதற்கென்று குறிப்பிட்ட சில இடங்கள் இருந்தன. இந்த இடங்கள் பெரும்பாலும் சமணக் கோயில்களை அடுத்திருந்தன. இந்த இடங்களுக்கு அஞ்சினான் புகலிடம் என்பது பெயர். இந்த இடங்களில் புகல் அடைந்தவரைச் சமணர் காத்துப் போற்றினார்கள். சாசனங் களிலும் இந்தச் செய்தி கூறப்படுகிறது. தென் ஆற்காடு மாவட்டம் திருக்கோவிலூர் தாலுக்காவில் பள்ளிச் சந்தல் கிராமத்திற்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் கிராமத்து வயலில் இச் செய்தியைக் கூறுகிற சாசனம் ஒன்று காணப்படுகிறது.' ஜம்பை என்னும் கிராமத்துக்கு வீர ராசேந்திரபுரம் என்று பெயர் இருந்ததென்றும், இங்குக் கண்டராதித்தப் பெரும்பள்ளி என்னும் சமணக்கோயில் இருந்ததென்றும், அங்குச் சோழதுங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம் என்று பெயர் உள்ள ஒரு புகலிடம் இருந்ததென்றும் அப் புகலிடத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்தவரைக் காப்பாற்ற வேண்டும் என்பது கண்ட ராதித்தப் பெரும்பள்ளியில் எழுந்தருளியிருந்த நேமிநாதசுவாமி ஆணை என்றும் இந்தச் சாசனம் கூறுகிறது. வடஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி தாலுகா தெள்ளாறு என்னும் ஊரிலே திருமூலீஸ்வரர் கோயில் முன் மண்டபத்தில் தரையில் ஒரு சாசனம் காணப்படுகிறது. மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம பாண்டிய தேவரின் 5ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம் அஞ்சினான் புகலிடம் ஒன்றைக் குறிப்பிடுகிறது.?

வடஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபேட்டை தாலுகா கீழ் மின்னல் என்னும் ஊரில் உள்ள ஒரு சாசனம் சகல லோக சக்கரவர்த்தி வென்று மண்கொண்டார் என்னும் சாம்புவராயர் அரசருடைய 16ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. அக்காலத்தில் இந்த ஊர் அஞ்சினான் புகலிடமாக இருந்த செய்தியை இச்சானம் கூறுகிறது.

3

வடஆர்க்காடு மாவட்டம் போளூர் தாலுகா வடமகா தேவி மங்கலம் என்னும் ஊரில் உள்ள சாசனம், சாசம்புவாரயர் சகலலோக சக்கரவர்த்தி ராஜநாராயணனுடைய 19 ஆவது ஆண்டில் எழுதப் பட்டது. இது, மகாதேவிமங்கலத்தைச் சேர்ந்த தனிநின்று வென்றான் நல்லூர் என்னும் இடம் அஞ்சினான் புகலிடமாக இருந்தது என்று