பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

7. சமயப்போர்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆருகத மதம் தமிழ்நாட்டில் கால்கொண்டு செல்வாக்குப் பெற்றிருந்தது என்று கூறினோம். இதனால் வேறு மதங்கள் அக்காலத்தில் இல்லை என்று கூறியதாகக் கருத வேண்டா. அக்காலத்தில் வேறு சில மதங்களும் இருந்தன. அவை வைதீக மதம்' எனப்படும் பிராமணீய மதமும், 'தேரவாதம்' எனப்படும் பௌத்த மதமும், மற்கலியுண்டாக்கிய ஆசீவக மதமும் ஆகும். சமண மதத்தைப் போன்றே இவையும் வடநாட்டில் தோன்றிப் பின்னர், தென்னாட்டிற்கு வந்தவை. இம்மதங்களை யன்றித் தமிழரின் மதம் ஒன்று தனியாக இருந்தது. இந்தத் தமிழர் மதத்தைத் 'திராவிட மதம்' என்னும் பெயரால் குறிப்போம். இத் திராவிட மதத்தைப் பற்றிப் பின்னர், உரிய இடத்தில் விளக்கிக் கூறுவோம்.

‘வைதீகம்,’

மேற்சொன்ன 'ஆருகதம், ‘பௌத்தம்,’ ‘ஆசீவகம்' ஆகிற நான்கு வடநாட்டு மதங்களும் அடிநாள் தொடங்கி ஒன்றோ டொன்று பகைத்துப் போரிட்டு ஒன்றை யொன்று அழிக்க முயற்சி செய்துவந்தன. இந்தச் சமயப்போர் தமிழ்நாட்டிலும் பண்டைக் காலந் தொட்டு நடந்துவந்தது. ஆகையால், இந்த மதப் பேராட்டத்தைப் பற்றிய வரலாற்றினை ஆராயவேண்டுவது நமக்குக் கடமையாகின்றது. இதனைச் சுருக்கமாக ஆராய்வோம்.

தென்னாட்டில் நடைபெற்ற வடநாட்டுச் சமயப் போரில் ஆசீவகமதம் முதன்முதல் ஆற்றல் குன்றி அழிந்துவிட்டது.' கையால், வைதீகம், பௌத்தம், ஆருகதம் என்னும் மூன்று மதங்கள் மட்டும் நெடுங்காலம் வரையில் போரிட்டுப் பூசல் விளைத்துவந்தன. 'ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் பற்றா மாக்கள் தம்முட னாயினும்

செற்றமுங் கலாமும் செய்யா தகலுமின்’

(மணிமேகலை 1ஆம் காதை 60-63)

என்று அரசன் ஆணையிருந்தும் சமயப்போர் நின்ற பாடில்லை. மூன்று சமயங்களும் ஒன்றற்கொன்று தீராப் பகைமை கொண்டிருந்த செய்தி