பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -7

உறுப்புணர யானுழக்குங் காலை - அறத்திறஞ் சேர்ந்(து) யானாம் ஒருவனே யல்லது எனக்கு மற்(று)

ஏனோர் துணையல்லர் என்றறிமின்

என்னும் திருக்கலம்பகச் செய்யுளால் இக் கருத்தை நன்கறியலாம். இதனால், அருகக் கடவுள் மாட்டுப் பக்தி செலுத்தினால் மட்டும் வீடுபேறடைய முடியாது என்பதும், சமண சமய நெறியைப் பின்பற்றி ஒழுகி இருவினை யறுத்து வீடுபேறடைய வருந்தி முயற்சி செய்ய வேண்டும் என்பதும் விளங்குகின்றது.

சைவ வைணவராகிய ‘இந்து’க்களின் கொள்கை இது: துறவிகளும் இல்லறத்தாரும், பெண் மகளிரும், மோட்சம் அடையலாம். ‘பக்தி' மட்டும் இருந்தால் போதும். துறவு பூண்டு தவஞ் செய்யாமலே 'பக்தி' ஒன்றினாலேயே முக்தியடையலாம். 'பக்தியால் முக்தி எளிதாகும்.' சிவபெருமான் திருவடி, 'பரவுவார் பாவம் பறிக்கும் அடி.' எத்தகைய பாதகம் செய்தவராக இருந்தாலும், அவர்கள், கடவுள் மாட்டுப் பக்தி செய்வாராயின் அவர் பாவங்களைக் கடவுள் நீக்கிவிடுவது மட்டும் அன்றி மோட்சமாகிய வீட்டுலகத்தையுங் கொடுக்கின்றார். ஆனால், பக்தி செய்ய வேண்டும். பக்தி செய்யாதவருக்கு அவர் அருள் செய்கிறதில்லை. இதுவே இந்து மதத்தின் கொள்கை. இக் கருத்தை இந்துமதப் பெரியார்கள் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள்.

66

‘திருமறு மார்வ! நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து மருவிய மனத்த ராகில் மாநிலத்து உயிர்களெல்லாம் வெருவுறக் கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினைய ரேனும் அருவினைப் பயன் துய்யார் அரங்கமா நகருள் ளானே'

(நாலாயிரம், திருமாலை, 39)

'மறிந்தெழுந்த தெண்திரையுள் மன்னும்மாலை வாழ்த்தினால் பறித்தெழுந்து தீவினைகள் பற்றறுதல் பான்மையே’

(நாலாயிரம், திருச்சந்த விருத்தம். 74)

‘தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்து கொண்டு

வாமனன் அடிக்கென்றேத்த மாய்ந்தறும் வினைகள்தாமே'

(நாலாயிரம், திருவாய்மொழி 10, பாட்டு 9.)

“வினைவல் இருள்எனும்

முனைகள் வெருவிப்போம்