பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -7

‘தந்தை தாய், தன்னுடன் தோன்றினார், புத்திரர், தாரம் என்னும்

பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்துபோக்கில் எனப் பற்றினாயே! வெந்த நீறாடியார் ஆதியார் சோதியார் வேதகீதர்

எந்தை ஆரூர்தொழுது உய்யலாம் மையல் கொண்டஞ்சல்' (நெஞ்சே சம்பந்தர் - 11 திருவாரூர்.)

இவ்வாறு, துறவறத்தாரும் இல்லறத்தாரும் ஆண் பாலரும் பெண் பாலரும் கடவுள் மாட்டுப் பக்தி மட்டும் செய்வாராயின் அவர்களுக்கு மோட்சம் உண்டு என்று இந்துமதம் பறை சாற்றியது. இவ்வளவு எளிய முறையில் யாதொரு வருத்தமுமின்றி வீட்டுலகத்திற்குச் செல்ல வழியைக் காட்டினால் அதனை மக்கள் விரும்பாதொழிவரோ? புதிய இந்துமதம், 'பக்தியால் முத்தி எளிதாகும்' என்னும் எளிய வழியைக் காட்டி செல்வாக்குப் பெற்றது. எளிய வழியைக் காணப்பெற்ற மக்கள், இதற்கு மாறாக உள்ள, மனைவி மக்களை விட்டு, உலக இன்பங்களைத் துறந்து, ஐம்புலன்களையும் அடக்கிக் கடுந்தவம் புரிந்து, இருவினையுங் கெடுத்து, ஞான வீரனாய் வீட்டுலகத்தை வெற்றியோடு கைக்கொள்ளும் சமண மோட்ச வழியைப் பின்பற்றுவரோ? ஆகவே, உலகம் ‘பத்தி’ செய்து முத்தி' பெற இந்து மதத்தைப் பின்பற்றத் தொடங்கியது. ஆகவே இந்து மதத்தின் பத்தி இயக்கம் சமண சமயத்தின் செல்வாக்கைப் பெரிதும் குறைத்துவிட்டது என்று துணிந்து கூறலாம்.

6

ஆனால், இந்து மதத்தின் பக்தி இயக்கம் ஒன்றினாலேயே சமணசமயம் தனது முழுச் செல்வாக்கையும் இழந்துவிட்டதாகக் கருதவேண்டா. சமணசமயத்தின் செல்வாக்கை யழிக்க இந்துமதத்தார் வேறு முறைகளையும் கையாண்டனர். அறநெறி அல்லாத மறநெறி களையும், செம்மை முறைக்கு மாறுபட்ட முறைகளையும், கொடுஞ் செயல்களையும், சூழ்ச்சிகளையும் செய்தபடியினாலே சமண சமயம் முழுவதும் செல்வாக்கு இழந்துவிட்டது. இதற்குச் சான்றுகள் உள்ளன.

பக்தியியக்கம் இந்து மதத்தில் தோன்றிய பிறகு, இந்துக்களாகிய சைவ வைணவர் சமணரைக் கடுமையாகத் தாக்கினார்கள். இதனால் சமயப் பகை மேன்மேலும் காழ்ப்புக் கொண்டது. சமணர்மேல் வசை மொழி களையும், இழி சொற்களையும் இந்துக்கள் அர்ச்சனை செய்த படியினாலே சமணர்களுக்கு இவர்கள்மேல் சீற்றம் வருவது இயல்பு தான். ஆகவே, சமணர் சைவ வைணவக் கோயில்களைக் காண்பதும்,