பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

பன்னும் பாழிப் பள்ளிகளும்

பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து

மன்ன னவனும் மனமகிழ்ந்து

வ வந்து தொண்டர் அடிபணிந்தான்.

”2

/ 85

இவ்வாறெல்லாம் சமணர்களைக் கழுவேற்றுதல், யானைகளால் மிதிப்பித்தல், ஊரைவிட்டுத் துரத்துதல், நிலபுலங்களைக் கவர்தல் முதலிய கலகங்களும், கொடுமைகளும், சச்சரவுகளும், போராட்டங்களும், நிகழ்ந்துவந்தன. சமயப்போர் இல்லை, சமயவெறி - எல்லா நாட்டிலும் பெருந்தீங்கு செய்துள்ளது. கிறித்துவர்களை உரோமர்கள் செய்த கொடுமைகளும், முஸ்லிம் - கிறிஸ்துவ மதப் போர்களும், செய்துள்ள துன்பங்களும் கொடுமைகளும் சொல்லி முடியா. இவ்வாறே, நமது நாட்டிலும் சமய வெறியர்கள் நிகழ்த்திய கொடுஞ் செயல்கள் கணக்கில. இவ்வாறெல்லாம் துன்பங்களும் கொடுமைகளும் நிகழ்ந்தபடியினாலே நாளடைவில், சமணசமயம் செல்வாக்கிழந்து நிலைகுன்றியது. துன்பங்களைப் பொறுக்க முடியாத சமணர்களில் பெரும்பான்மை யோர் மதம் மாறினார்கள். அஃதாவது சமண சமயத்தைவிட்டுச் சைவர்களாகவும், வைணவர்களாகவும் மாறிவிட்டார்கள்.

சைவ வைணவராகிய இந்துக்கள் எல்லாப் பழியையும் சமணர் மேல் சுமத்தினார்கள் என்பது, "போம் பழியெல்லாம் அமணர் தலையோடே,” என்னும் பழமொழியினால் அறியலாம். வைணவ ராகிய திருவாய்மொழி விளக்க உரைகாரர், இந்தப் பழமொழியை விளக்க ஒரு கதை எழுதுகிறார். அந்தக் கதை இது:

“ஒரு கள்ளன் ஒரு பிராமணக் கிருஹகத்திலே கன்னமிட, அது ஈரச் சுவராகையாலே இருத்திக்கொண்டு மரிக்க, அவ்வளவில் அவன் பந்துக்கள் வந்து பிராமணனைப் பழி தரவேணுமென்ன, இரண்டு திறத்தாரும் ராஜாவின் பாடேபோக, அந்த ராஜாவும் அவிவேகியாய் மூர்க்கனுமாகையாலே, ப்ராஹ்மணா! நீரீரச்சுவரை வைக்கையாலே யன்றோ அவன் மரித்தான். ஆகையாலே நீ பழி கொடுக்க வேணும் என்ன, அவன் எனக்குத் தெரியாது, சுவரை வைத்த கூலியாளைக் கேட்க வேணும் என்ன, அவனை அழைத்து, நீயன்றோ ஈரச்சுவர் வைத்தாய்; நீ பழி கொடுக்கவேணும் என்ன, அவனும் தண்ணீரை விடுகிறவள் போரவிட்டாள்; என்னாற் செய்யவாவது என்? என்ன, அவளை அழைத்துக் கேட்க, அவளும் குசவன் பெரும்பானையைத்