பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

ס

119

வரலாறும் ஒத்திருத்தலின், சங்கமித்திரர் என்று மகாவம்சம் கூறுவது மாணிக்கவாசகரைக் குறிக்கும் என்று திரு. கே.ஜி. சேக்ஷையர் என்பவர் ஒரு திங்கள் வெளியீட்டில் எழுதியிருக்கிறார்; (TamilianAntiquary Vol I. No. 4 P. 54) இவர் கருத்தையே உண்மை எனக்கொண்டு ஸ்மித் என்னும் சரித்திர ஆசிரியரும் எழுதியிருக்கிறார். அவர், இலங்கை வேந்தனை, மாணிக்கவாசகர் சைவமதத்தில் சேர்ந்தார் என்பதை ஆதாரமாகக் கொண்டு, அந்த அரசன் மகாவம்சத்தில் கூறப்பட்ட கோதாபயனாக இருக்கக் கூடும் என்றும், மகாவம்ச ஆசிரியர் சைவராகிய மாணிக்க வாசகரைப் புத்தபிக்ஷ சங்கமித்திரர் என்று தவறாக எழுதியிருக்கக் கூடும் என்றும் கூறுகிறார்.' இவ் விருவர் கருத்துக்களும் தவறு என்பது எமது கருத்து. ஏனென்றால், மாணிக்க வாசகர் இலங்கைக்குச் சென்று இலங்கை மன்னனைச் சைவ சமயத்தில் சேர்ந்ததாக அவர் வரலாற்றில் காணப்படவில்லை. இலங்கை மன்னன் சிதம்பரத்திற்கு வந்தபோது அவனை மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சங்கமித்திரரோ நேரே இலங்கைக்குச் சென்று அந்த நாட்டரசனை மதம் மாறச் செய்தார். அன்றியும், சங்கமித்திரர் இலங்கையில் கொல்லப்பட்டிறந்தார். மாணிக்கவாசகரோ சிதம்பரத்தில் சிவகதியடைந்தார். மாணிக்கவாசகர் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இருந்தவர். சங்கமித்திரர் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் இருந்தவர். இக்காரணங்களினால் சங்கமித்திரரும் மாணிக்கவாசகரும் ஒருவரே என்று கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை.

6. நாதகுத்தனார்

இப்பெயர் "நாதகுப்தனார்" என்பதன் திரிபு போலும். இவர் குண்டலகேசி என்னும் காப்பியத்தைத் தமிழில் இயற்றியவர். இவர் இந்தக் காவியத்தின் ஆசிரியர் என்பது, நீலகேசி (மொக்கல வாதச் சருக்கம் 78ஆம் பாட்டின்) உரையில் ‘புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட வினைய வுடம்பு' என்னும் அடியை மேற்கோள் காட்டி, இதனை 'நாதகுத்தனார் வாக்கு' என்று குறிப் பிட்டிருப்பதிலிருந்தும் அறியப்படும். மேற்கோள் காட்டப்பட்ட இப்பகுதி குண்டலகேசிச் செய்யுளிலிருந்து எடுக்கப்பட்டது. அச்செய்யுள் இது:

66

“எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேல் தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவு மாகி நுனைய புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட இனைய வுடம்பினைப் பாவி யானென தென்னலு மாமோ.