பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

நாதகுத்தனாரைப் பற்றிய வரலாறு வேறொன்றும் தெரிய வில்லை. ‘குண்டலகேசி' என்னும் பௌத்தப் பிக்குணி ஒருத்தி, ‘வட நாட்டில் இருந்த ‘ஆவணம்' என்னும் ஊரில் நாதகுத்தனார்' என்னும் ஆருகத சமயத்தவரை வாதில் வென்றதாக நீலகேசி உரையினால் தெரிகிறது. ஆருகதராகிய அந்த நாதகுத்தனார் வேறு. குண்டலகேசி யின் ஆசிரியரும் பௌத்தருமாகிய இந்த நாதகுத்தனார் வேறு.

நீலகேசி என்னும் ஜைன நூல் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்று கூறப்படுவதால், குண்டலகேசியும் பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாதல் வேண்டும். ஏனென்றால், குண்டல கேசியை மறுப்பதற்காகவே நீலகேசி இயற்றப்பட்டதென்பது வரலாறு. ஆகவே, குண்டலகேசியின் ஆசிரியராகிய நாதகுத்தனாரும் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராதல் வேண்டும்.

7. ஆசாரிய புத்ததத்த மகாதேரர்

இவர் பௌத்தர்களால் பெரிதும் போற்றப்படுகிறார். சோழ நாட்டில் பிறந்த தமிழராகிய இவர், கவீரபட்டினம் (காவிரிப் பூம்பட்டினம்) உரகபுரம் (உறையூர்) பூதமங்கலம், காஞ்சீபுரம் முதலான இடங்களிலும், இலங்கையிலே அநுராதபுரத்தில் இருந்த மகா விகாரையிலும் வசித்திருந்தார். காவிரிப்பூம்பட்டினத்தில் கணதாசர் என்னும் சோழ அமைச்சர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது இவர், தம் மாணவராகிய புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி மதுராத்தவிலாசினீ என்னும் நூலை எழுதினார். இந்நூல், சூத்திர பிடகத்தின் 5ஆவது பிரிவாகிய குட்டக நிகாய என்னும் நிகாயத்தின் உட்பிரிவாகிய புத்தவம்சம் என்னும் 14ஆவது பிரிவுக்கு உரையாகும். இவ்வுரை நூலைப் புத்தவம்சாட்டகதா என்றும் கூறுவர். மற்றொரு மாணவராகிய சுமதி என்பவர் வேண்டுகோளின்படி அபிதம்மாவதாரம் என்னும் நூலை இயற்றினார். இது அபிதம்ம பிடகத்திற்குப் பாயிரம் போன்றது. பூதமங்கலம் என்னும் ஊரில், வேணுதாசர் என்பவர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது வினயவினிச்சியம் என்னும் நூலைப் புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி இயற்றினார். களம்ப (களபர) குலத்தில் பிறந்த அச்சுதவிக்கந்தன் என் னும் அரசன் சோழநாட்டை அரசாண்ட காலத்தில் இந்நூலை எழுதியதாக இந்நூலில் இவர் கூறி யிருக்கிறார். இலங்கையிலே மகாவிகாரையில் இருந்த மகாதேரர் என்னும் சங்கபாலருடைய வேண்டுகோளின்படி உத்தரவினிச்சயம்