பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

4

வேணுதாசர் என்று ஜம்புநாதன் அவர்கள் கூறுகிறார். இவர்கள் கூற்றையும் எம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அறிஞர்கள் ஆராய்ந்து காண்க.

10. சுமதி, ஜோதிபாலர்

கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர்கள். பேர் பெற்ற புத்தகோஷாசாரியர், தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, இவர்களுடன் வசித்திருந்தார். காஞ்சீபுரத்தில் புத்தகோஷர் இவர்களுடன் தங்கியிருந்த போது, இவர்கள் புத்தகோஷரை இலங்கைக்குச் சென்று அங்குள்ள திரிபிடக உரை நூல்களைப் படிக்கத் தூண்டினார்கள். இதனை,

66

'ஆயாசிதோ ஸுமதினா தேரேன பத்தந்த ஜோதிபாலேன காஞ்சீபுராதிஸு மயா புப்பே ஸத்திம் வஸந்தேன

என்று புத்தகோஷர் தாம் எழுதிய மனோரத பூரணி என்னும் நூலில் கூறுகிறார். இவர்கள் வேண்டுகோளின்படி புத்தகோஷர், ஸாராத்த பகாசினீ, மனோரத பூரணி என்னும் உரைநூல்களை இயற்றினார். இவர்களைப்பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை.

11. புத்தமித்திரர்

இவர் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் நாட்டில் இருந்தவர். ‘வீரசோழியம்' என்னும் இலக்கண நூலை இயற்றிய பௌத்தராகிய புத்தமித்திரருக்கு முன்பு இருந்தவர். இவர் மயூர பட்டணத்தில் (மாயவரம்?) ஒரு பௌத்த விகாரையில் இருந்தபோது, பேர்பெற்ற புத்தகோஷாசாரியர் வந்து இவருடன் சிலகாலம் தங்கி யிருந்தார். இவர் வேண்டுகோளின்படி திரிபிடகத்தின் ஒரு பகுதியாகிய மஜ்ஜிம நிகாயத்திற்குப் புத்தகோஷ ஆசாரியர் பபஞ்சசூடனீ என்னும் உரையை எழுதினார். இவரைப் பற்றி வேறு செய்தி ஒன்றும் தெரியவில்லை.

12. போதி தருமர்

இவர் காஞ்சீபுரத்தை அரசாண்ட ஓர் அரசனுடைய குமாரர். இவர் தியான மார்க்கம்' என்னும் பௌத்த மதப்பிரிவைச் சேர்ந்தவர். சீனதேசம் சென்று, அங்குத் தமது கொள்கையைப் போதித்து வந்தார். இவரது கொள்கை சங்கரரின் அத்வைத மதக் கொள்கையைப் போன்றது. இவர் கி.பி. 520இல் சீன தேசத்துக் காண்டன் பட்டினத்தைச் சேர்ந்ததாகக் கூறுவர். வேறு சிலர் கி.பி. 525 இல் சீன தேசம்