பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

125

சென்றதாகக் கூறுவர். அக்காலத்தில் சீன தேசத்தை ஆண்டுவந்த லியாங் குடும்பத்தைச் சேர்ந்த ஊ - டி (Wu-Ti) என்னும் அரசன் அவைக்களத்தில் இவர் தமது தியான மார்க்கத்தைப் போதித்தார். இந்த அரசன், கி.பி. 502 முதல் 549 வரை அரசாண்டவன். பௌத்த மதத்தில் மிகுந்த பற்றுள்ளவன். பின்னர் இந்த அரசனுக்கும் இவருக்கும் மனத்தாங்கல் ஏற்பட, சீனதேசத்தின் வடபகுதியிற் சென்று இவர் தமது கொள்கையைப் பரப்பியதாகக் கூறுவர். இவருக்குப் பிறகு, இவர் போதித்த மதம் சீன தேசத்திலும் ஜப்பான் தேசத்திலும் சிறப்புற்றது. இவரது தியான மார்க்கத்துக்கு ஜப்பானியர் ஸென் (Zen) மதம் என்றும், சீனர் சான் (ch’an) மதம் என்றும் பெயர் கூறுவர். போதி தருமரைச் சீனர் தமக்குரிய இருபத்தெட்டுச் சமய குரவர்களில் ஒருவராகக் கொண் டிருக்கின்றனர். இவரைச் சீனர் டா மொ (Ta-mo) என்பர். இவரது மாணவர் சீனராகிய ஹூய் கெ-ஓ (Hui-K’o) என்பவர். போதி தருமர் சீன தேசத்தில் தமது மதத்தைப் போதித்த பிறகு, ஜப்பான் தேசத்துக்குச் சென்றதாகவும், அங்குக் கடோக யாமா (Katoka Yama) என்னும் இடத்தில் ஷோடகு டாய்ஷி (Shotoku Taishi) என்பவர் இவரைக் கண்டு உரையாடியதாகவும் ஜப்பான் தேசத்து வரலாறு கூறுகின்றது. ஜப்பான் தேசத்திலும் சீன தேசத்திலும் இவருக்குக் கோவில்கள் உண்டு. இந்தக் கோயில்களில் இரவும் பகலும் எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன.

13. ஆசாரிய திக்நாகர் (தின்னாகர்)

இவரது வரலாற்றைச் சீன யாத்திரிகரான யுவான் சுவாங் என்பவர், தமது யாத்திரைக் குறிப்பில் எழுதியிருக்கிறார். இவர் காஞ்சீ புரத்திற்குத் தெற்கில் இருந்த சிம்ம வக்த்ரம் என்னும் ஊரில் பிறந்தவர் என்பர். சிம்மவக்த்ரம் என்பது சீயமங்கலமாக இருக்கக்கூடும். (சீயம் = சிம்மம் -சிங்கம்) சீயமங்கலம் என்பது செங்கல்பட்டு ஜில்லா காஞ்சீபுரம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில், பிராமண குலத்தில் பிறந்து, வைதீக வேத நூல்களைக் கற்ற இவர் தேரவாத பௌத்த மதத்தின் ஒரு பிரிவாகிய வாத்சீ புத்திர பிரிவைச் சேர்ந்து பௌத்தரானார். பிறகு, இவருக்கும் இவருடைய குருவுக்கும் கொள்கை மாறுபாடு ஏற்பட்டு, குருவை விட்டுப் பிரிந்து, காஞ்சியிலிருந்து வடநாட்டிற்குச் சென்றார். அங்கே பேர் பெற்ற வசுபந்து என்பவரிடம் மகாயான பௌத்த நூல்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். பின்னர், நளாந்தைப் பல்கலைக் கழகஞ்சென்று பல