பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

இவர், புத்தகோஷாசாரியர் இருந்த கி.பி. 5ஆவது நூற்றாண் டுக்குப் பிற்காலத்தில் இருந்தவர். ஆனால், எப்பொழுது இருந்தார் என்பதைத் தெரிவிக்க யாதொரு சான்றும் கிடைக்க வில்லை.

மாக்கோதை தம்மபாலர்

இலங்கை அநுராதபுரத்தில் உள்ள ஒரு சாசனம் மாக்கோதை தம்மபாலர் என்பவரைப்பற்றிக் கூறுகிறது. அச்சாசனச் செய்யுள்® இது.

“போதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்கும்

தீதி லருள்சுரக்கும் சிந்தையான் ஓதி

வருதன்மங் குன்றாத மாதவன் மாக்கோதை ஒருதன்ம பால னுளன்

இவரைப்பற்றி வேறு ஒன்றும் அறியக்கூடவில்லை.

16. புத்தி நந்தி, சாரி புத்தர்

இவ்விருவரும் சோழநாட்டில் போதிமங்கை என்னும் ஊரில் இருந்தவர். சைவ சமய ஆசாரியராகிய திருஞான சம்பந்தர் இந்த ஊர் வழியாகச் சங்கு, தாரை முதலான விருதுகளை ஊதி ஆரவாரம் செய்து கொண்டு வந்தபோது, பௌத்தர்கள் அவரைத்தடுத்து, வாதில் வென்ற பின்னரே வெற்றிச் சின்னங்கள் ஊதவேண்டும் என்று சொல்ல, அவரும் அதற்குச் சம்மதித்தார். பிறகு பௌத்தர்கள் புத்த நந்தியைத் தலைவராகக் கொண்டு வாதுநிகழ்த்தியபோது, சம்பந்தருடன் இருந்த சம்பந்த சரணாலயர் என்பவர் இயற்றிய மாயையினால் இடிவிழுந்து புத்த நந்தி இறந்தார் என்று பெரியபுராணம் கூறுகின்றது. இதனைக் கண்ட பௌத்தர்கள், ‘மந்திரவாதம் செய்யவேண்டா, சமயவாதம் செய்யுங்கள்,' என்று சொல்லிச் சாரிபுத்தரைத் தலைவராகக் கொண்டு மீண்டும் வந்தார்கள். அவ்வாறே சாரி புத்தருக்கும் சம்பந்தருக்கும் சமயவாதம் நிகழ, அதில் சாரி புத்தர் தோல்வியுற்றார் என்று பெரியபுராணம் கூறுகின்றது. (சாரி புத்தர் காண்க.) இவர்களைப் பற்றி வேறு வரலாறு தெரியவில்லை. திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்தவ ராதலால், இவர்களும் அந்த நூற்றாண்டிலிருந்தவராவர்.

17. வச்சிரபோதி (கி.பி. 661-730)

இவர் பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த பொதிகைமலைக்கு அருகில் மலைநாட்டில் இருந்தவர். இவர் தந்தையார் ஓர் அரசனுக்கு