பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

காவிரியாறு பாய்கிற சோழ நாட்டில் நாகநகரத்தில் (நாகைப்பட்டினம்?) இருந்த நாகானன விகாரையில் இவர் இருந்ததாகக் கூறப்படுகிறார். மேலும் அந்நூலிலே, இவர் கீழ்வருமாறு கூறப்படுகிறார்: “முற்காலத் திலே இருந்த மகாகாசபர் என்பவரின் பெயரைச் சூடி அவரைப் போலவே புகழ்பெற்று விளங்கு கிறவரும், விசாலமும் அலங்கார மும் உள்ள மதில்களால் சூழப்பட்ட நாகானன விகாரையில் வசிக்கிறவரும், வானத்தில் விளங்கும் வெண்ணிலாப் போன்று ஞானத்தினால் விளங்குபவரும், எல்லா விதமான சாத்திரங்களையும் சூத்திர, வினய, அபிதம்மம் என்னும் மூன்று பிடக நூல்களையும் துறைபோகக் கற்றவரும், பகைவராகிய யானைகளுக்குச் சிங்கம் போன்றவரும், சீலம் உடையவராய்த் திருப்தி முதலான குணங்களால் அலங்கரிக்கப் பட்டவரும் தர்மத்தையும் விநயத்தை யும் நன்றாகப் போதித்துப் புத்த தர்மத்தை விளங்கச் செய்பவரும் ஆகிய மகாகாசிபதேரர், அபிதம்ம பிடகம் எனும் பெருங் கடலிலே ஆங்காங்கு நிறைந்திருக்கும் சாரார்த்தம் கிய இரத்தினங்களை எடுத்து ஒன்று சேர்த்துக் கற்போருடைய கழுத்தில் அணியும் மாலை போன்று. 'மோகவிச்சேதனீ' என்னும் இரத்தின மாலையை அமைத்துக் கொடுத்தார். இந்த நூல் புகழோடு விளங்கி, மக்களுடைய மோகாந்த காரமாகிய இருளை நீக்கி, அவர்களைத் தர்மத்தில் ஒழுகச் செய்து, நன்மை பயந்து நல்ல கதியைத் தந்து உலகத்திலே பௌத்த தர்மம் உள்ளவரையில் நிலைத்திருக்கும்.

இவருடைய வரலாறு வேறு ஒன்றும் தெரியவில்லை.

27. சாரிபுத்தர்

இவர் சோழநாட்டினைச் சேர்ந்தவர் என்பதும், ‘பாடாவ தாரம்’ என்னும் பாலிமொழி நூலை இயற்றியவர் என்பதும் ‘கந்த வம்சம்' (கிரந்த வம்சம்), 'சாசன வம்சம்' என்னும் நூல்களினால் தெரிகின்றது. இவரது காலம் வரலாறு முதலியவை ஒன்றும் தெரியவில்லை.

திருஞானசம்பந்த சுவாமிகள் காலத்தில் சோழநாட்டில் சாரிபுத்தர் என்னும் ஒரு தேரர் போதிமங்கை என்னும் ஊரில் இருந்தார் என்றும், அவருடன் ஞானசம்பந்தர் சமயவாதம் செய்தார் என்றும் பெரிய புராணம் கூறுகின்றது. பெரியபுராணம் கூறு கின்ற சாரிபுத்தரும், கந்த வம்சம் கூறுகின்ற சாரிபுத்தரும் வெவ்வேறு காலத்திலிருந்த வெவ்வேறு சாரிபுத்தர்கள் ஆவர். அ