பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

1. மணிமேகலை

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்கள் பௌத்தர் ஜைனர் என்னும் இரு சமயத்தாரால் இயற்றப்பட்டவை. சிந்தாமணி, சிலப் பதிகாரம் இரண்டும் ஜைனரால் இயற்றப்பட்டன. மணிமேகலை, குண்டலகேசி என்பன பௌத்தர்களால் இயற்றப்பட்டவை. இந்த ரண்டில் மணிமேகலையைத் தவிர மற்றது இறந்துவிட்டது. மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றென்று கூறப்படு கின்றபோதிலும், இது சிலப்பதிகாரத்துடன் தொடர்புடையது. இதனை, ‘மணிமே கலைமே லுரைப்பொருண் முற்றிய சிலப்பதிகார முற்றும்’

என்னும் சிலப்பதிகார வஞ்சிக்காண்டக் கட்டுரைச் செய்யுட் பகுதியினால் அறியலாம். எனவே, சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் ஒரே காப்பியம் என்று கூறினும் பொருந்தும். ஆயினும், ஆன்றோர் இவையிரண்டினையும் வெவ்வேறு காப்பியங் களாகவே கொண்டனர்.

மணிமேகலையை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். (இவரது வரலாற்றினை 11ஆம் அதிகாரத்தில் காண்க.) இந்நூல் முழுவதும் ஆசிரியப்பாவினால் அமைந்தது. 'கதை பொதி பாட்டு' என்னும் பதிகத்தைத் தவிர்த்து, 'விழா வறை காதை' முதலாகப் ‘பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை' இறுதியாக முப்பது காதை களையுடையது. இதற்கு மணிமேகலை துறவு என்றும் பெயர் உண்டு. இதனை இயற்றிய சாத்தனார், இளங்கோ வேந்தர் என்னும் இளங்கோ அடிகள் முன்னிலையில் இதனை அரங்கேற்றினார். இவற்றை,

66

'இளங்கோ வேந்த னருளிக் கேட்ப

வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் மாவண் டமிழ்த்திற மணிமே கலைதுற வாறைம் பாட்டினு ளறியவைத் தனனென்

எனவரும் பதிக ஈற்றடிகளால் அறியலாம்.

99

மணிமேகலை பல திறத்தானும் சிறப்புடைய நூல். சொல்வளமும் பொருள் ஆழமும் செறிந்து திகழும் இந்நூல் வெறும் இலக்கியம் மட்டும் அன்று. பண்டைத் தமிழ்நாட்டின் வரலாற்றினையும், கலை களையும், நாகரிகத்தினையும் அக்காலத்திலிருந்த சமயங்கள் அவற்றின் கொள்கைகள் முதலியவற்றையும், அக்கால வழக்க