பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

147

கீரா சந்தேஸ்யம் என்னும் செய்யுள் நூல் சிங்கள மொழியில் கி.பி. 15ஆம் நூற்றாண்டில், இலங்கையரசன் ஆறாம் பராக்கிரம பாகு (கி.பி. 1412 - 1467) காலத்தில் இயற்றப்பட்டது. இலங்கையிலே தோட்ட கமுவா என்னும் இடத்தில் இராகுலதேரர் தலைமையில் ஒரு கல்லூரி நடைபெற்றிருந்ததென்றும், அக்கல்லூரியில் சம்ஸ் கிருதம், பாலி, சிங்களம், தமிழ்மொழிகள் பயிலப்பட்டன என்றும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. சோழமன்னர் இலங்கை யைக் கைப்பற்றி அரசாண்ட காலத்தில், இலங்கையில், தமிழ் நாகரிகம் போற்றப்பட்டதோடு, தமிழ் மொழியையும் சிங்களவர் கற்று வந்தனர் என்பது தெரிகிறது.

இலங்கையிலே சிங்களவர் தமிழ் பயின்றபோது, பௌத்த ராகிய அவர்கள், பௌத்தரால் இயற்றப்பட்ட வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கணத்தைக் கற்றிருக்க வேண்டும். ஏனென்றால், சிங்களவர் சம்ஸ்கிருதம் படிக்கும்போது, சந்திரகோமினி என்னும் பௌத்தர் இயற்றிய சம்ஸ்கிருத இலக்கணத்தைத்தான் கற்பது அவர்கள் வழக்கமாக இருந்து வருகிறது. அதுபோல, தமிழ் கற்பதற்குப் பௌத்தர் இயற்றிய வீரசோழிய இலக்கணத்தைத்தான் கற்றிருக்க வேண்டும். அன்றியும், ஸிததஸங்கரா என்னும் சிங்கள மொழி இலக்கணம், கி.பி. 13ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இந்நூலில், இரண்டாம் வேற்றுமையைக் கூறுகிற பகுதி, வீரசோழியத்தைப் பின்பற்றி எழுதியதாகக் கூறப்பட்டிருக்கிறது. இதனால், இந்த இலக்கண நூல், பௌத்தர்களால் போற்றப்பட்டதென்பது விளங்குகின்றது.

7

மாதிரிக்காக, இந்நூலினின்றும் சில செய்யுள்களைக் காட்டு

வோம்:-

‘மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன் மெய்த்தவத்தால் தொக்கவன் யார்க்குந் தொடரவொண்ணாதவன் தூயனெனத் தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழுரைக்கப் புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே.'

'ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன்கேட் டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க நீயு முளையோ வெனிற்கரு டன்சென்ற நீள்விசும்பில் ஈயும் பறக்கு மிதற்கென் கொலோசொல்லு மேந்திழையே!' ‘நாமே வெழுத்துச்சொ னற்பொருள் யாப்பலங் காரமெனும் பாமேவு பஞ்ச வதிகார மாம்பரப் பைச்சுருக்கித்