பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

தேமே வியதொங்கற் றேர்வீர சோழன் றிருப்பெயராற் பூமே லுரைப்பன் வடநூன் மரபும் புகன்று கொண்டே’

(பாயிரம்)

'அறிந்த வெழுத் தம்முன் பன்னிரண் டாவிகளான, கம்முன் பிறந்த பதினெட்டுமெய், நடுவாய்தம், பெயர்த்திடையா முறிந்தன யம்முத லாறும், ஙஞண நமனவென்று செறிந்தன மெல்லினம், செப்பாத வல்லினந் தேமொழியே.'

(சந்தி. 1)

இந்நூல் உரைப் பகுதியினின்று மாதிரிக்காகக் கீழ்க்கண்ட பகுதியைத் தருகிறோம். இது, பொருட்படலத்தில், 'நாற்குலப் பக்கம்' என்னும் தொடக்கத்தினுடைய 19ஆவது செய்யுள் உரை:

'களவழி களத்திலழிவு. குரவையாவது, இன்றேர்க் குரவை யிட்டாடுதல். ஆற்றலாவது, ஆரியரணாத் தன் பகை மிகையை மதியாது பொரும் ஆற்றல். வல்லாண் பக்கமாவது, பகைவென்று விளங்கி மதிப்பெரு வாகை வண்டாரத்துப் பெறுவான் செங் களத்துப் புலர்ந்து மாய்தல். வேட்கையார் பக்கமாவது, விருந் தோம்பலு மழலோம்பலு முட்பட வெண்வகைத்தாம் பக்கம். மேன்மையாவது, பெரும்பகை தாங்குமேன்மை. அது அருளொடு புணர்ந்த வகற்சியாம். 'புனிற்றுப் பசியிழந்த புலிப்பிணவு தனாஅது முலைமறாஅக் குழவி வாங்கி வாய்ப்படுத் திரையெனக் கவர்ந்தது நோக்கி யாங்க

வேரிளங் குழவிமுன் சென்று தானக்

கூருகிர் வயமான் புலவுவேட்டுத் தொடங்கிய

வாளெயிற்றுக் கொள்ளையிற் றங்கினன் கதுவப்

பாசிலைப் போதி மேவிய பெருந்தகை

ஆருயிர் காவல் பூண்ட ட

பேரருட் புணர்ச்சிப் பெருமை தானே.’

பொருளாவது, அறம் பொருளின்ப மூன்று பொருளிலும் விடாமற் புணர்ப்பது, காவலாவது, பிழைத்தோரைத் தாங்குதல். துறவாவது, தவத்தினை வென்ற பக்கம். அஃதாவது,

'வாடாப் போதி மரகதப் பாசடை

மரநிழ லமர்ந்தோ னெஞ்சம் யார்க்கும்