பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

றொன்றானு முள்ளான் பிறர்க்கே யுறுதிக் குழந்தா னன்றே யிறைவ னவன்றாள் சரணங்க ளன்றே.”

அவையடக்கம்

"நோய்க்குற்ற மாந்தர் மருந்தின் சுவை நோக்கில்லார் தீக்குற்ற காதலுடையார் புகைத்தீமை யோரார்

போய்க்குற்ற மூன்று மறுத்தான்புகழ் கூறுவேற்கென் வாய்க்குற்ற சொல்லின் வழுவும்வழு வல்லவன்றே.

‘எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேல் தினைப் பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவுமாகி நுனைய புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட இனைய உடம்பினைப் பாவி யானென தென்னலு மாமோ.' 'வகையெழிற் றோள்க ளென்று மணிநிறக் குஞ்சியென்றும் புகழெழ விகற்பிக் கின்ற பொருளில்கா மத்தை மற்றோர் தொகையெழுங் காதல் தன்னால் துய்த்துயாந் துடைத்து மென்பார் அகையழ லழுவந் தன்னை நெய்யினா லவிக்க லாமோ.' ‘அனலென நினைப்பிற் பொத்தி யகந்தலைக் கொண்ட காமக் கனவினை யுவர்ப்பு நீராற் கடையற வலித்து மென்னார் நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குது மென்று நிற்பார் புனவினைப் புனலி னாலே யாவர்போ காமை வைப்பார்.’

‘பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்துங் காளையாந் தன்மை செத்தும் காமுறு மிளமை செத்தும் மீளுமிவ் வியல்பு மின்னே மேல்வரு மூப்பு மாகி

நாளுநாட் சாகின் றோமால் நமக்குநா மழாத தென்னோ.'

4. சித்தாந்தத் தொகை

இது, இறந்துபட்ட நூல்களுள் ஒன்று. இது பௌத்தமதக் கொள்கைகளைத் தொகுத்துக் கூறும் நூல் எனத் தெரிகின்றது. இதனை இயற்றியவர் இன்னார் என்பதும், ஒருவரா பலரா என்பதும் தெரிய வில்லை. இயற்றப்பட்ட காலமும் தெரியவில்லை. சிவஞான சித்தியார் என்னும் சைவசமய நூலுக்கு ஞானப்பிரகாசர் எழுதிய உரையில் பரபக்கம் செளத்திராந்திகன் மதம், 2, 3, 1 பாட்டுக்களின் உரை, கீழ்க் கண்ட செய்யுளை இந்நூலிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கின்றார்.