பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

1. புத்தர் தோத்திரப் பாக்கள்

வீரசோழிய உரை, நீலகேசி உரை முதலியவற்றில் புத்தரைப் பற்றிய பாடல்கள் பல காணப்படுகின்றன. அவற்றுள் சில வற்றைத் தொகுத்துக் கீழே தருகின்றோம். அவற்றின் சொல்லழகு பொருளழகுகளைச் சுவைத்து இன்புறுக:-

1.

2.

3.

4.

போதி, ஆதி பாதம், ஓது!

போதிநிழல் புனிதன் பொலங்கழல் ஆதி உலகிற் காண்!

மாதவா போதி வரதா வருளமலா

பாதமே யோது சுரரைநீ - தீதகல

மாயா நெறியளிப்பாய் வாரன் பகலாச்சீர்த் தாயா யலகிலரு டான்!

உடைய தானவர்

உடைய வென்றவர்

உடைய தாள்நம

சரணம் ஆகுமே!

5.

பொருந்து போதியில்

இருந்த மாதவர்

திருந்து சேவடி

மருந்தும் ஆகுமே!

6.

போதி நீழற்

சோதி பாதம்

7.

காத லால்நின்

றோதல் நன்றே!

அணிதங்கு போதி வாமன் பணிதங்கு பாதம் அல்லால்,