பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

17.

18.

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

மானாயும் கொலைகளவு கள்பொய் காமம்

வரைந்தவர்தாம் உறைந்தபதி மானா வூரே!

பைங்கண்வாள் எயிற்றினப் பகட்டெருத்தின் வள்உகிர்ப் பரூஉத்திரட் குரூஉக்கொடாட் பாலுடைச் செனாவுடைச் சிங்கஏறு நான்குதாங்க மீதுயர்ந்த சேயொளிச்

சித்திரங் குயிற்றிநூறு செம்பொனாசனத்தின்மேல் கொங்குநாறு போதுசிந்தி வானுளோர் இறைஞ்சிடக் கோதிலா அறம்பகர்ந் தமர்ந்தகோன் குளிர்நிழற் பொங்குதாது கொப்புளித்து வண்டுபாடு தேமலர்ப்

போதிஎம் பிரான் அடிக்கண் போற்றின்வீட தாகுமே!

வீடுகொண்ட நல்அறம் பகர்ந்துமன் பதைக்கெலாம்

விளங்குதிங்கள் நீர்மையால் விரிந்திலங்கும் அன்பினோன் மோடுகொண்ட வெண்நுரைக் கருங்கடற் செழுஞ்சுடர்

முளைத்தெழுந்த தென்னலாய் முகிழ்ந்திலங்கு போதியின் ஆடுகின்ற மூவகைப் பவங்கடந்து குற்றமான

ஐந்தொடங்கொர் மூன்றறுத்த நாதனாள் மலர்த்துணர்ப் பீடுகொண்ட வார்தளிப் பிறங்கு போதி யானைஎம்

பிரானை நாளும் ஏத்துவார் பிறப்பிறப் பிலார்களே!

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)

19. திருமேவு பதுமஞ்சேர் திசைமுகனே முதலாக உருமேவி அவதரித்த உயிர் அனைத்தும் உயக்கொள்வான் இவ்வுலகும் கீழுலகும் மிசையுலகும் இருள்நீங்க எவ்வுலகும் தொழுதேத்த எழுந்தசெழுஞ் சுடர்என்ன விலங்குகதிர் ஓர் இரண்டும் விளங்கிவலங் கொண்டுலவ அலங்குசினைப் போதிநிழல் அறம்அமர்ந்த பெரியோய் நீ!

(தாழிசை)

மேருகிரி இரண்டாகும் எனப்பணைத்த இருபுயங்கள் மாரவனி தையர்வேட்டும் மன்னுபுரம் மறுத்தனையே! 'வேண்டினர்க்கு வேண்டினவே அளிப்பனென மேலைநாள் பூண்டஅரு ளாள! நின் புகழ்புதிதாய்க் காட்டாதோ!