பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

177

லிருந்த பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளின் நடுவில் அமைக்கப் பட்டிருந்ததாகப் பண்டை நூல்களினால் தெரிகின்றது. இவற்றிற்கு ஆராமம்’ (பூந்தோட்டம்) என்று பெயர் வழங்கிவந்தன. மலையாள நாட்டிலுள்ள சாத்தன் காவுகளும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில் களாக இருந்தவை. இப்போது இந்துமதக் கோயில்களாக மாற்றப் பட்டவை என்பது ஆராய்ச்சிவல்லோர் கருத்து. சாத்தனாருக்கு ‘ஐயப்பன்' என்னும் பெயரும் மலையாள தேசத்தில் வழங்கி வருகின்றது. காவிரிப்பூம்பட்டினத்திலும் சாத்தன் கோயில் இருந்த தாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது. 'சாஸ்தா' அல்லது 'சாத்தன்' என்னும் வடசொல்லிற்கு நேரான தமிழ்ச் சொல் ‘ஐயன்' அல்லது ஐயனார்' என்பது. ‘ஐயன்' என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள், பௌத்தமதம் அழிந்த பின்னர், அம்மதக் கொள்கை களையும் தெய்வங்களையும் இந்துமதம் ஏற்றுக்கொண்ட போது, வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர். சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனாரைத் திருமாலுக்கும் சிவ பெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டனர். அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச் சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார்.

‘பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார் சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங் கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற் றூரனாரே.'

என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம்.

பிற்காலத்தில், 'சாத்தனார்', 'ஐயனார்', ‘அரிஹரபுத்திரர்’ என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாகச் செய்து, பண்டைப் பருமையைக் குலைத்துவிட்டனர்.

‘சாத்தன்” அல்லது 'சாஸ்தா' என்று புத்தருக்குப் பெயர் கொடுக்கப் பட்டதன் காரணம் என்னவென்றால், அவர் எல்லாச் சாஸ்திரங்களை யும் கற்றவர் என்னும் கருத்துப் பற்றியதாகும். சிலப்பதிகாரம், கனாத் திறமுரைத்த காதையில், 'பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு’ என வரும் அடியில், 'பாசண்டச் சாத்தன்' என்னும் சொல்லுக்கு அடியார்க்கு