பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

ஏழுநாள் வரையில் இவர்கள் நீந்திக் கொண்டிருந்தனர். அப்போது கடற்தெய்வமாகிய மணிமேகலை அங்குவந்து சங்கன் கண்களுக்கு மட்டும் தோன்றி, தங்கத்தட்டில் அமிர்தம் போன்ற அறுசுவை உணவை அவனுக்குக் கொடுத்தது. அதனைச் சங்கன் மறுத்து “இன்று உபவாச நாள்; ஆகையால்; இன்று நான் உணவு உட்கொள்ளேன், என்றான். சங்கன் தனக்குள் உளறுகிறான் என்று அவனுடன் நீந்திக் கொண்டிருந்த வேலையாள் கருதி, ‘ஐயா, என்ன பிதற்றுகின்றீர்?’ என்றான். சங்கன், ‘நான் பிதற்றவில்லை; என் கண்முன் நிற்கும் பெண்முன் பேசுகிறேன்' என்றான். ஏவலாளன், 'அங்ஙனமாயின் அவள் மண்ணுலக மங்கையா, தெய்வலோகத் தெய்வமா என்பதைக் கேளும். அன்றியும் இப்போது இந்தத் துன்பத்தினின்றும் காப்பாற்ற உதவி செய்ய முடியுமா என்று கேளும் என்றான். சங்கன் மணிமேகலையை இக்கேள்விகளைக் கேட்க, அவள், “நான் இக்கடலில் வாழ்கின்ற தெய்வம்; நீ செய்த நற்செயலுக்காக உன்னைக் காப்பாற்ற வேண்டுவது எனது கடமையாதலால், நான் இவ்விடம் வந்தேன். நீ இப்போது எங்குச் செல்ல விரும்புகின்றாய்?' என்று கேட்க, அவன், ‘எனது காசிமாநகரம் செல்ல வேண்டும்' என்று சொன்னான். உடனே மணிமேகலை தனது தெய்வ ஆற்றலினால் பெரிய கப்பல் ஒன்றினைச் செய்தது. அது நிறைய விலையுயர்ந்த பண்டங்களை அமைத்துச் சங்கனையும் அவனது ஏவலாளையும் அதில் ஏற்றி, தானே கப்பலைச் செலுத்திச் காசிமாநகரம் கொண்டு போய்விட்டது.

மகாஜனக ஜாதகம்:

இந்தக் கதையிலும் இந்தத் தெய்வம் உதவி செய்த வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. அதன் சுருக்கம் பின் வருவது:

மிதிலை தேசத்து அரசன் ஜனகன் என்பவனுக்கு அரிட்ட ஜனகன், பொலஜனகன் என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். தகப்பன் இறந்த பின்னர், மூத்தவனான அரிட்டஜனகன் அரசனானான். இப்போது இளையவனான பொலஜனகன் தமையன்மேல் பகை கொண்டு, படை திரட்டி வந்து சண்டை செய்தான். சண்டையில் அரிட்ட ஜனகன் இறக்க, அவன் தம்பி அரசனானான். இறந்த அரிட்ட ஜனகனின் மனவிை, அப்போது வயிறு வாய்த்திருந்தவள், பெருஞ் செல்வத்தை எடுத்துக்கொண்டு, ஒருவருமறியாமல் சண்பை நகரம் சென்று, அங்கு ஓர் ஆண் மகவைப் பெற்றாள். அக்குழந்தைக்கு மகா ஜனகன் என்று