பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

189

இருந்ததென்பதும், அதனை ‘இரண்டாவது சேனன்' என்னும் அரசன் பிற்காலத்தில் பழுதுபார்த்துப் புதுப்பித்தான் என்பதும் தெரிகின்றன. இந்தப் பள்ளி மணி மேகலை கட்டியதாகக் கூறப்படும் தூபி அன்றென்பது உறுதி.)

பி

இலங்கையில் சிங்களவர் வழங்கும் கதை சிலவற்றிலும் மணி மேகலையைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவற்றை யெல்லாம் இங்கு எழுத வேண்டுவதில்லை. ஆனால், அக்கதைகள் ஒன்றில் தமிழருக்கு வியப்பைத் தருவன எவையென்றால், 'பாலங்கா’ என்பவன் தன் மனைவி ‘பத்தினி' என்பவளுடன் மதுரைக்குச் செல்லும் வழியில் 'வைத' என்னும் ஆறு குறுக்கிட்டதால், பத்தினி தன் விரலில் அணிந்திருந்த ஆழியைக் கழற்றி ஆற்றில் எறிய, அந்த ஆற்றுநீர் விலகி இவர்களுக்கு வழிவிட்டது என்பதும், அக்கரையை யடைந்த பின்னர், மணிமேகலா தெய்வம் வந்து ஆற்றில் எறியப்பட்ட மோதிரத்தை எடுத்தும் பத்தினியிடம் கொடுத்தது என்பதுவுமே இங்கே பாலங்கா என்பவன் கோவலன்; பத்தினி என்பவள் கண்ணகி; வைத என்பது வைகை ஆறு.

6

சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு தமிழ்க் காவியங்களிலும் மணிமேகலா தெய்வத்தைப் பற்றிக் கூறப்பட்டு உள்ளது. கடலில் கப்பலோட்டி வாணிகம் செய்த கோவலனுடைய குல தெய்வமாக இருந்தது மணிமேகலா தெய்வம் என்றும், கோவலனுடைய மூதாதையர் ஒருவர் வாணிகத்தின் பொருட்டுக் கடலில் கப்பலேறிச் சென்றபோது, நள்ளிருளில் கப்பல் கவிழ்ந்து துன்புற்றபோது, அத் தெய்வம் அவரைக் காப்பாற்றியதென்றும், அந்நன்றியை மறவாமல் கோவலன் தன் மகளுக்கு அத்தெய்வத்தின் பெயரையே சூட்டினான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது; (சிலம்பு, அடைக்கலக் காதை, 21- 39) கோவலன் மகள் மணி மேகலைக்கு, உதயகுமரனால் நேர இருந்த இடையூறுகளை மணி மேகலா தெய்வம் நீக்கிய செய்தி மணிமேகலை நூலினால் அறியப் படும். காவிரிப் பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த இந்திர விழாவை, ஓர் ஆண்டு, சோழமன்னன் நடைபெறாமல் நிறுத்திய காரணத்திற்காக மணிமேகலா தெய்வம் கோபங்கொண்டு சபிக்க, அவ்வூர் வெள்ளத்தினால் அழிந்தது என்று ஷ நூலினால் அறியப்படுகிறது. இத்தெய்வத்தைக் கடல் காவலுக்காக இந்திரன் நிறுவினான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.