பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

(மணிமேகலைத் தெய்வத்தின் படம் சயாம் தேசத்து அரசரின்

அரண்மனையில் இருக்கிறது.)

2. தரைக்காவல் தெய்வம் சம்பாபதி

சாதுர் மாகராஜிக லோகம் என்னும் தெய்வலோகத்தில் உள்ள நான்கு தேவர்கள், நிலவுலகத்திலே நல்லவர்களுக்கு நேரிடுகிற துன்பங்களைப் போக்கச் சில தெய்வங்களை நிறுவினார்கள் என்பது பௌத்தர்கள் நம்பிக்கை. அவ்வாறு நிறுத்தப்பட்ட தெய்வங்களுள் மணிமேகலை என்பது ஒன்றென்றும், இத்தெய்வம் கடலில் மரக்கலத்தில் செல்வோருக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்கி அவர்களைக் காப்பாற்றியது என்றும் மேலே விளக்கினோம். தரையில், நல்லவர் களுக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்க, அத்தேவர்கள் சம்பாபதி என்னும் தெய்வத்தை நிறுத்தினார்கள் என்று கருத வேண்டியிருக்கிறது. னென்றால், சம்பாபதி என்னும் தெய்வத்தைக் கோதமை என்பவள் இவ்வாறு போற்றியதாக மணிமேகலை நூல் கூறுகிறது.

66

"துறையும் மன்றமும் தொல்வலி மரனும்

உறையுளும் கோட்டமும் காப்பாய், காவாய்!”

(மணி 9-ஆம் காதை)

"நாவலோங்கிய மாபெருந் தீவினுள், காவல் தெய்வதம்” என்று சம்பாபதி கூறப்படுகிறபடியினாலே, இத்தெய்வம் நாவலந் தீவு (இந்தியா தேசம்) முழுமைக்கும் காவல் தெய்வமாக அமைந்திருந்தது. இமய மலையினின்று இத்தெய்வம் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், நாவல் மரத்தின் கீழ்த் தங்கி அரக்கரால் மக்களுக்கு நேரும் துன்பங்களைப் போக்க இத்தெய்வம் தவம் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

66

"இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து விளங்கொளி மேனி விரிசடை யாட்டி

பொன்திகழ் நெடுவரை யுச்சித் தோன்றித் தென்றிசைப் பெயர்ந்த இத்தீவத் தெய்வதம்

சாகைச் சம்பு தன்கீழ் நின்று

மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு

வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற சம்பு என்பாள் சம்பா பதியினள்.

99

(மணி. பதிகம் 1-8)